மற்ற செய்திகள்

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – விவரம் கோருதல்

அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – விவரம் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் MR-ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – மூலிகை கொசு ஒழிப்பான் மருந்தினை – மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்  கொண்டு, அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் வாங்கி தெளித்திட அறிவுறுத்தல் – சார்பு.

பள்ளிக் கல்வி – மூலிகை கொசு ஒழிப்பான் மருந்தினை – மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்  கொண்டு, அனைத்து தனியார் மற்றம் அரசு பள்ளிகளில் இணைப்பில் கண்டுள்ள மகளிர் உரிமை கழகத்தில் வாங்கி தெளித்திட – பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. DocScanner-28-Oct-2மூலிகை-கொசு-ஒழிப்பான்021-16.45Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு/ உயர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல். மாவட்டக் கல்வி அலுவலருக்கு,தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தீபாவளி பண்டிகை 2021 கதர் சிறப்பு விற்பனை – சார்பாக. –

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தீபாவளி பண்டிகை 2021 கதர் சிறப்பு விற்பனையினை அதிகரிக்க வேலூர் மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் COLLECTORE-PROCEEDINGS-KADARDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பபடுகிறது.

மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வு – மார்ச் 2021 – மாணவர்கள் பெயர் பட்டியல் – திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக.

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு... மார்ச் 2021ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வில் பங்குபெற்ற மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மீள ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து, திருத்தங்கள் இருப்பின், திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Examination-3276-B4Download

தொடக்க கல்வி 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிகளில் செய்துள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு இணைப்பில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல் தொடர்பாக

தொடக்க கல்வி 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பள்ளிகளில் செய்துள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு இணைப்பில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் நியமனம் செய்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ளவாறு பள்ளிகள் ஆய்வு செய்து அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 2 நகல்களில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 3140-B2-1-1Download HMS-LISTDownload FORMOT-OF-FORMDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

ஆசிரியரல்லாத பணியிடங்கள் மற்றும் ஆசிரியரல்லதா பணியாளர்கள் விவரம் ஒப்படைக்காத அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசியர்கள் உடன் ஒப்படைக்க கோருதல்

கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு அரசு உயர்நிலைப்பள்ளி - அத்திகுப்பம், செம்பேடு குடியாத்தம், வீரிசெட்டிப்பள்ளி, பூசாரிவலசை, காந்திநகர் குடியாத்தம், தேவரிஷிக்குப்பம், தாதிரெட்டிப்பள்ளி, கரிகிரி, பல்லாலகுப்பம், எம் ஜி ஆர் நகர் பேர்ணாம்பட்டு.சலவன்பேட்டை , கொல்லமங்கலம், சாத்கர், ஏரிகுத்தி அரசு மேல்நிலைப்பள்ளி - கூடநகரம், நெல்லுர்பேட்டை மகளிர் , கல்லப்பாடி., கே வி குப்பம் ஆண்கள் , குடியாத்தம் ஆர் எஸ், செஞ்சி, வெண்ணப்பள்ளி,. திருவலம் மகளிர் , கே ஏ கே எம் நகரவை சைதாப்பேட்டை மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடம் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரம் 08-10-2021 அன்றுக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள்வரை ஒப்படைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கும் செயலாக உள்ளது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள பள்ளிதலை

மெட்ரிக் பள்ளிகள் – இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 2020- 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய கேட்பு தொகை விடுவிப்பு தொடர்பாக தங்கள் பள்ளி EMIS இணையதளத்தில் RTE Reimbursement Login ல் பள்ளி மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் SAVE செய்தும் தவறாக இருக்குமாயின் கீழ்க்காணும் விவரங்களுடன் சமர்பிக்க கோருதல் – தொடர்பாக

மெட்ரிக் பள்ளிகள் - இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 2020- 2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய கேட்பு தொகை விடுவிப்பு தொடர்பாக தங்கள் பள்ளி EMIS இணையதளத்தில் RTE Reimbursement Login ல் பள்ளி மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் SAVE செய்தும் தவறாக இருக்குமாயின் கீழ்க்காணும் விவரங்களுடன் சமர்பிக்க கோருதல் - தொடர்பாக EMIS CLIAM 2020-2021 EMIS ல் School login ல் Menu வில் RTE REIMBURSEMENT என்ற லிங்கில் செல்ல வேண்டும் பள்ளி மாணவர்கள் விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் SAVE செய்யப்பட வேண்டும் இந்நாள் வரை SAVE செய்யாத பள்ளிகள் விவரம் EMIS-NOT-SAVE-SCHOOLS-MATRIC-EDWIZEDownload 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்குரிய RTE மாணவர்கள் எண்ணிக்கை தவறாக இருக்கும் பள்ளிகள் முகப்பு கடிதம் ( Covering

மேல்நிலை பொதுத் தேர்வு 2022 புதிய தேர்வு மையங்கள் அமைக்க கருத்துருக்கள் ஒப்படைக்க கோருதல்

புதிய தேர்வு மையம் கோரும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இணைப்பு HSE-NEW-CENTRE-2021-Download HR-SEC-NEW-formatDownload New-centre-G.O.1-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் புதிய தேர்வு மையம் கோரும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை பொதுத் தேர்வு 2021-2022 கல்வியாண்டில் புதிய பள்ளிகள் மற்றும் இணைப்பு பள்ளிகள் மாற்றம் கோரும் பள்ளிகள் விவரம் கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு HSE-NEW-SCHOOL-AND-CLUBBING-SCHOOLSDETAILSDownload New-Schools-Clubbing-list1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலு பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

16-10-2021 அன்று சனிக்கிழமை பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு சென்னை பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறை ந.க.எண் 34462 / பிடி1 / இ1 / 2021 நாள் 13-10-2021ன்படி 14-10-2021 மற்றும் 15-10-2021 ஆகிய இருநாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதிநாளான சனிக்கிழமை 16-10-2021 அன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி ஆணை பெறப்பட்டுள்ளது. எனவே வேலுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 16-10-2021 சனிக்கிழமை விடுமுறை நாளாகும் என அறிவிக்கப்படுகிறது. இணைப்பு school-leave-Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.