CIRCULARS

தேர்தல் அவசரம் – பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – அரசு/ நகரவை/ ஆதி திராவிடர்/நிதியுதவி/ உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளை திறந்து வைக்க தெரிவித்தல் -சார்ந்து

CIRCULARS
அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக தேர்தல் மையங்களாக செயல்படும் பள்ளிகளில் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 17.04.2024 மற்றும் 18.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளை திறந்து வைக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

மிக மிக அவசரம் – தேர்தல் பணி – அரசு நகரவை/நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புறவாளர்கள் (தேர்தல் பணி அல்லாதவர்கள் மட்டும்) 19.04.2024 அன்று பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளி பணியில் இருக்க ஆணையிடல் – சார்பு

CIRCULARS
அரசு நகரவை/நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் துப்புறவாளர்கள் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 19.04.2024 அன்று காலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பள்ளி பணியில் இருக்க உறுதிபடுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. (தேர்தல் பணி அல்லாதவர்கள் மட்டும்) மேலும் துப்புறவாளர்கள் பணிபுரியும் விவரம் பெயர்/ அலைபேசி எண்ணுடன் Google Sheetஇல் இன்று மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு சார்ந்த தலைமையாசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது. 3810-A1-Scavenger-Election-dutyDownload https://docs.google.com/spreadsheets/d/1M34CpR9YLuQPgfqZpeTYl0WVGmOQLK788HK86nf7t7g/edit#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமையாசிரியர், அரசு நகரவை/நிதியுதவி/உயர்/ மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – அரசு/ நகராட்சி / மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 31.05.2024 அன்றைய நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்/இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிட விவரங்கள் கோருதல் – தொடர்பாக

CIRCULARS
அரசு/நகராட்சி/மாதிரி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி/இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிட விவரங்களை (31.05.2024அன்று பணிஓய்வு பெறுவோர் உட்பட) இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பமிட்ட அளவுகோல் பதிவேட்டின் 3 ஆண்டுகளுக்கான நகல்களுடன் (2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 நகல்கள்) இவ்வலுவலக அ3 பிரிவில் தனிநபர் மூலம் 17.04.2024அன்று நண்பகல் 12.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. BT_SG_VacancyDownload BT_SG_Vacancy_Format_15-04Download முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர் மாவட்டம். பெறுநர்,   அனைத்து அரசு/நகராட்சி/மாதிரி    உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,    வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – வருமான வரி – TAN DEMAND FILING PENDING தொடர்பாக மாவட்ட வாரியாக பள்ளிகளின் விவரம் கீழ்காணும் பட்டியலின் படி பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பெற்றப்பட்டதை உடனடியாக முடித்து அதன் அறிக்கையினை சமர்பிக்க தெரிவித்தல் – தொடர்பாக.

CIRCULARS, CIRCULARS TO GOVT. SCHOOLS
TAN-DEMAND-FILING-SCHOOLSDownload TAN-DSE-vellore-PendingDownload TAN-DEMANDDownload // ஒப்பம் // // செ.மணிமொழி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் இணைப்பில் காணும் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி -அனைத்து வகை பள்ளிகள் -கோடை வெப்பம் -பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் -அனைத்து வகை பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

CIRCULARS
அனைத்து வகை தொடக்க/நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு Summer-Heat-Wave_-Instructions-to-Headmasters-Teachers-and-StudentsDownload ஓம்.செ.மணிமொழி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை தொடக்க/நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

வேலூர் மாவட்டம் – சார்நிலைப்பணி – அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு மாற்றுப் பணி ஆணை வழங்கியது – பணியிலிருந்து விடுவித்தல் – சார்ந்து

CIRCULARS
அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கு 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டிற்கு மாற்றுப் பணி ஆணை வழங்கியது பணியிலிருந்து விடுவிக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 1480-A4-Teacher-reliving-order-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமை ஆசிரியர்கள், அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர்மாவட்டம்.

2023-2024ஆம் கல்வியாண்டு – 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் –  கால அட்டவணை வெளியிடுதல் – சார்ந்து

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான 2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும் 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது. last-working-day-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள், அரசு/ அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் – 2023-2024ஆம் கல்வியாண்டு – பள்ளி இறுதி தேர்வுகள் – அறிவுரை வழங்குதல் – சார்ந்து

CIRCULARS
2023 -2024ஆம் கல்வியாண்டு 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் நடத்துதல் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தேர்வு கால அட்டவணையில் பின்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகளை நடத்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. final-exam-Advice-regDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர், தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள், அரசு/ அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

வேலூர் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு – Hi – Tech Lab சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 16.04.2024 அன்று மாலை 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக ஆ1 பிரிவு அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு - Hi - Tech Lab சார்பான விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 16.04.2024 அன்று மாலை 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக ஆ1 பிரிவு அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Hi-Tech-LabDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

Revised batch details – வேலூர் மாவட்டம் – அரசு/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள் – ஆய்வக உபகரணங்களை கையாளுதல் – பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்த பயிற்சியில் கலந்து கொள்ள ஆய்வக உதவியாளர்களை பணிவிடுப்பு செய்தல் – சார்ந்து

CIRCULARS
வேலூர் மாவட்டம், அரசு/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள், ஆய்வக உபகரணங்களை கையாளுதல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சார்ந்த பயிற்சி 12.04.2024 முதல் 03.05.2024 முடிய இணைப்பில் உள்ளவாறு வேலூர், சாய்நாதபுரம், ந.கிருஷ்ணசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் கலந்து கொள்ள ஆய்வக உதவியாளர்களை பணிவிடுப்பு செய்ய சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. LAB-ASST-BATCH-1-VLRDownload LAB-ASST-BATCH-2-VLRDownload LAB-ASST-BATCH-3-VLRDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.