ஆசிரியரல்லாத பணியிடங்கள் மற்றும் ஆசிரியரல்லதா பணியாளர்கள் விவரம் ஒப்படைக்காத அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசியர்கள் உடன் ஒப்படைக்க கோருதல்

கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அரசு உயர்நிலைப்பள்ளி – அத்திகுப்பம், செம்பேடு குடியாத்தம், வீரிசெட்டிப்பள்ளி, பூசாரிவலசை, காந்திநகர் குடியாத்தம், தேவரிஷிக்குப்பம், தாதிரெட்டிப்பள்ளி, கரிகிரி, பல்லாலகுப்பம், எம் ஜி ஆர் நகர் பேர்ணாம்பட்டு.சலவன்பேட்டை , கொல்லமங்கலம், சாத்கர், ஏரிகுத்தி

அரசு மேல்நிலைப்பள்ளி – கூடநகரம், நெல்லுர்பேட்டை மகளிர் , கல்லப்பாடி.,

கே வி குப்பம் ஆண்கள் , குடியாத்தம் ஆர் எஸ், செஞ்சி, வெண்ணப்பள்ளி,. திருவலம் மகளிர் , கே ஏ கே எம் நகரவை சைதாப்பேட்டை

மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடம் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் விவரம் 08-10-2021 அன்றுக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள்வரை ஒப்படைக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கும் செயலாக உள்ளது. எனவே மேற்குறிப்பிட்டுள்ள பள்ளிதலைமை ஆசிரியர்கள் உரிய விவரங்கள் நாளை 22-10-2021 அன்று பிற்பகல் 12 மணிக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவுறத்தப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

மேற்குறிப்பிட்டுள்ள பள்ளிதலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.