மற்ற செய்திகள்

தேர்வுகள் – வேலூர் மாவட்டம் , 2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் – சார்பு.

2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் - சார்பு. 3728-EMIS-B4-docxDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். நகல். மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் (தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)

இணைப்பில் காணும் நபர்கள் தங்கள் பள்ளிகளில் பகுதிநேரத்தில் பணிபுரிந்திருந்தால் உடன் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ள கோருதல்

அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள நபர்கள் வேலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பகுதிநேரத்தில் துப்புரவாளர் மற்றும் பெருக்குபவராக தற்போது பணிபுரிந்து வந்தாலோ  அல்லது பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தாலோ நாளை (07-02-2021) காலை 11.00 மணிக்குள் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திரு. ச. சுரேந்தர் பாபு, உதவியாளர் = 9442273554 பணியாளர்-பெயர்-A1-29.11.2021-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அரசு / நகரவை உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

வேலூர் மாவட்டம் – அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளியில் சேம நல நிதி கணக்கு எண் வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015- 2016 ஆம் நிதியாண்டு முடிய கணக்கீட்டு தாளின் படி விடுபட்ட தொகையினை ( Missing Credit ) சரி செய்யும் பொருட்டு உரிய விவரங்கள் மாநிலக் கணக்காயருக்கு கருத்துருக்கள் அனுப்ப கோருதல் – தொடர்பாக-

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளியில் சேம நல நிதி கணக்கு எண் வைத்துள்ள சந்தாதாரர்களின் கணக்கில் 2015- 2016 ஆம் நிதியாண்டு முடிய கணக்கீட்டு தாளின் படி விடுபட்ட தொகையினை ( Missing Credit ) சரி செய்யும் பொருட்டு உரிய விவரங்கள் மாநிலக் கணக்காயருக்கு கருத்துருக்கள் அனுப்ப கோருதல் சார்பாக கீழ்க்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். MISSING-CREDIT-3571-2021Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி, வேலூர் மாவட்டம் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

ஜனவரி – 2022-ல் நடைபெறும் NTSE தேர்விற்கு விண்ணப்பிக்க காலஆவகாசம் வழங்குதல் – சார்பு.

ஜனவரி - 2022-ல் நடைபெறும் NTSE தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய 12.11.2021 முதல் 27.11.2021 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது தற்பொழுது தொடர் மழையின் காரணமாக பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் எக்காரணம் கொண்டும் கால அவகசாம் நீட்டிக்கப்படமாட்டாது என்பதை அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை/மெட்ரிக் / CBSE / ஆங்கிலோ இந்தியன் / கேந்திரா வித்யாலயா ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. பதிவேற்றம் செய்யப்பட்டதை அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை/மெட்ரிக் / CBSE / ஆங்கிலோ இந்தியன் / கேந்

10 மற்றும் 12ம் வகுப்பு முதல் அலகுத் தேர்வு கால அட்டவணை (Revised)

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு முதல் அலகுத் தேர்வு கால அட்டவணையின் படி தேர்வுகள் நடத்துமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது, வினாத்தாட்கள் தேர்வுகள் நடைபெறும் நாள் அன்று வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி இணையதளத்தின் edwizevellore mail ID க்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு தேர்வுக் கால அட்டவணை முதல்-அலகுத்-தேர்வு-கால-அட்டவணை-திருத்தப்பட்டவைDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது

NMMS -2021 – 2022 ஆம் கல்வியாண்டில் கல்வி உதவித்தொகை – சார்பாக.

2021 - 2022 ஆம் கல்வியாண்டில் மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் திரன்படிப்பு உதவித் தொகை - NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் குறித்து சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் 29.11.2021 அன்று காலை 10 00 மணி அளவில் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஆ3 பிரிவு உதவியாளரிடம் நேரில் தொடர்பு கொள்ளமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. NMMS-Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர், வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு, தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trust Examination) ஜனவரி- 2022-ல் தேர்வு நடத்துதல் – அறிவுரைகள் வழங்குதல் – சார்பாக.

ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு (Trust Examination) ஜனவரி- 2022 30.01.2022 அன்று தேர்வு நடத்துதல் –  அறிவுரைகள் வழங்குதல்  -  சார்பாக. இணைப்பு : அரசாணைகள் - 2 மற்றும் அறிக்கை TRUST-EXAM-NOTIFICATION-2021-22-2Download G.O.NO_.256-2Download G-.O.-NO.-960-2Download DocScanner-Nov-26-2021-2.47-PMDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், (ஊராகப் பகுதி) தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம். நகல் மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் (தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் அனுப்பப்படுகிறது.)

Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் தனிகவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சென்னை, மாநில திட்ட இயக்குநர் (சமக்கிர சிக்ஷா)  அவர்களின் அறிவுரையின்படி, நடந்து முடிந்த Hi-tec Lab assessment testல் சிறப்பாக பதிலளித்த இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்களை ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள NTS தேர்வில் பங்கேற்கும் வகையில் 27 நவம்பர் 2021க்குள் விண்ணப்பிக்க (இணைப்பு பட்டியலில் உள்ள மாணவர்கள் மட்டும்) தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பு பட்டியலில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு NTS தேர்வு கட்டணம் மாநில அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NTS தேர்வுக்கு  பட்டியலில் உள்ள100 மாணவர்களில் எந்த ஒரு மாணவரின் பெயரும் விடுபடாமல் தேர்வு எழுத தலைமை ஆசிரியர்கள்‘ முழு பொறுப்பு ஏற்க வேண்டும். என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர்,

மெட்ரிக் பள்ளிகள் /நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2021- 2022 ஆம் நடப்பு கல்வியாண்டில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட (FINAL ADMISSION) மாணவர்களின் விவரம் பள்ளி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயல முடியாத பள்ளிகள் கருத்துரு சமர்பிக்க கோருதல் – தொடர்பாக.

மெட்ரிக் பள்ளிகள் /நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2021- 2022 ஆம் நடப்பு கல்வியாண்டில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்பில் LKG ல் SELECTED / WAITING LIST ல் நிரந்தரமாக ( FINAL ADMISSION ) செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் பள்ளி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயல முடியாத பள்ளிகள் கீழ்க்காணும் விவரங்கள் உடன் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2021 -2022 RTE APPLICATION FOR ADMISSION மாணவனின் விண்ணப்பம். 2021- 2022 தங்கள் பள்ளியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின்( Selected list) படிவத்தின் படி நகல்-12021-2022 தங்கள் பள்ளியில் WAITING LIST ல் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் படிவத்தின் படி நகல் -12021 - 2022 ஆம் கல்வியாண்டில் SELECTED / WAITING ஆகியவற்றில் நிரந்தரமாக கடைசியாக (FINAL ADMISSION

வேலூர் மாவட்ட அரசு/ உயர்/மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (தகவல் அறியும் உரிமைச்சட்டம்)

தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005-ன் கீழ் கோயம்புத்தூர் – திரு.ஜெயகிருஷ்ணன். என்பார் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை கோரும் மனு - பிரிவு 6(3) ன்படி அனுப்புதல் – சார்பு. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE DETAILS முதன்மை கல்வி அலுவலர் வேலூர் நகல்: மாவட்ட கல்வி அலுவலர், வேலூர்