மற்ற செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்
அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
2021-2022ம் கல்வியாண்டில் வேலூர் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கான ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அட்டவணையின்படி தேர்வுகளை நடத்த பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
annual-exam-6-to-9
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள்
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்
நகல்
மாவட்டக் கல்விஅலுவலர்வேலூர்
29-04-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வுகள் சார்பான கூட்டத்திற்கு முதுகலை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு பணியிருந்தால் கூட்டத்திற்கு வருகை புரியவேண்டாம், செய்முறை தேர்வு பணியினை மேற்கொள்ள தெரிவித்தல் சார்பு,.
இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
29-04-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வுகள் சார்பான கூட்டத்திற்கு முதுகலை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு பணியிருந்தால் கூட்டத்திற்கு வருகை புரியவேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.
செய்முறை தேர்வு பணியினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துறை அலுவலர்களுக்கான ஆணையினை தாங்கள் பணிபுரியும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளர்களிடம் துறை அலுவலர்களுக்கான நியமன ஆணை வழங்கப்படும். முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்களை தொடர்பு கொண்டு நியமன ஆணைகளை தங்களிடம் ஒப்படைப்பார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்
PG-NAME-LIST-1-1Download
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
இணைப்பில் காணும் முதுகலை ஆசிரியர்கள் (தலைமை ஆசிரியர்கள் வழியாக)
நகல்
75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா (STAP) தொடர் நடவடிக்கைக்காக அனுப்புதல்
ந.க.எண்.908/ஆ1/2022, நாள் 13.04.2022
இணைப்பில் உள்ள செயல்முறைகளின், பார்வையில் காணும் கடித நகல் தகவலுக்காகவும், தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
இணைப்பு : பார்வை கடிதம்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
7793_M_S2_2022-1Download
2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு-மனமொத்த மாறுதல்/ அலகுவிட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் – அறிவுரைகள் வழங்கியது – திருத்திய கலந்தாய்வு அட்டவணை- வெளியிடுதல்
அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2021-2022ம் ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு-மனமொத்த மாறுதல்/ அலகுவிட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்கியது - திருத்திய கலந்தாய்வு அட்டவணை- வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Unit-Transfer-Instructions_20220419_0001Download
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நாளை (19.04.2022) நடைபெறவிருந்த தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக 22.04.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
கே வி குப்பம் / பேர்ணாம்பட்டு / குடியாத்தம் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
19.04.2022 அன்று கே எம் ஜி கலைக் கல்லூரியில் நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் சார்பான ஆயத்தக்கூட்டம் நிர்வாக காரணத்திற்காக 22.04.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது,. தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் / கணினி பயிற்றுநர்கள் / தொழிற்கல்வி ஆசிரியர்கள் / உடற் கல்வி இயக்குநர் நிலை 1 ஆகியோர்களை 22.04.2022 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் வகையில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு கே வி குப்பம் / பேர்ணாம்பட்டு / குடியாத்தம் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
கே வி குப்பம் / பேர்ணாம்பட்டு / குடியாத்தம் ஒன்றிய தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவலர்
20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய தேதிகளில் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெறுதல் – இயக்குநர்கள் & இணை இயக்குநர்கள் மாவட்டங்களில் களப்பணி மேற்கொள்ளுதல் – அறிவுரைகள் வழங்குதல்
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ,
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறுதல் தொடர்பாக இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கள பணி மேற்கொள்ள 20.04.2022 மற்றும் 21.04.2022 ஆகிய நாட்களில் வருகை புரிய இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள தூய்மைக பணிகள் மற்றும் இதர வசதிகள் மேம்படுத்த இணைப்பில் காணும் செயல்முறைகளின்படி செயல்பட பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
Review Meeting - Director & JDs visitDownload
16.04.2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுதல் சார்பாக.
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள்,
தொடர் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், 16.04.2022 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது என அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.
Saturday holidayDownload
இராணுவம் – தேர்வுகள் – டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் மாணவர்களை (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்வதற்கான தகுதித்தேர்வு -சார்பு
இராணுவம் - தேர்வுகள் - டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய இராணுவ கல்லூரியில் மாணவர்களை (ஆண்கள் மற்றும் பெண்கள்) சேர்வதற்கான தகுதித்தேர்வு - ஜனவரி 2023 - ற்கான விளம்பாரம் செய்தல் -சார்பு.
DocScanner-Apr-11-2022-11-53Download
A6-2305-2022-04-04-2022-1Download
A6-2305-2022-04-04-2022-Annexure-1Download
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
மாவட்டக் கல்வி அலுவலர்,
வேலூர்
நகல்
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 – தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச்சட்ட (கட்டண) – சார்பு.
தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 - தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச்சட்ட (கட்டண) விதிகள் 2005 - ன்படி நகலுக்கான கட்டணத்தை ஒரே அரசு கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்துதல் - சார்பு.
DocScanner-Apr-9-2022-15-04Download
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
நகல்,
மாவட்டக் கல்வி அலுவலர்,
வேலூர் (தகவலுக்காக)
