மற்ற செய்திகள்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு 2022 – தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகளை தொடர்ந்து மறுகூட்டல் மற்றும் விடைத்தாள்நகல் வழங்ககோரி விண்ணப்பங்கள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக மூலம் கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1-May-2022-Scan-Coopy-RT-1-Letter-to-CEODownload Scan-Copy-RT-Fees-Payment-Karuvoolam-InstructionsDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 2022 வெளியிடப்பட்டமை – தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்துதல் விண்ணப்பம் பெறுதல் – சார்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 2022ம் மாதம் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுதுவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1-Auguest-2022-Examinations-ApplicationDownload 1-August-2022-Exam-Fees-Payment-Karuvoolam-InstructionsDownload 1-August-2022-Nodal-Centre-InstructionsDownload 1-August-2022-Private-Candidate-InstructionsDownload 1-Equivalent-subjectsDownload 1-

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (NMMS) 2015-2016ம் கல்வியாண்டு முதல் மாணவர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல் மாணவர்கள் விவரம் மற்றும் வங்கி தொடர்பாக விவரங்கள் சரியாக உள்ளதா என உறுதிபடுத்த கோருதல் சார்பு.

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வுகள் தொடர்பாக 2015-2016ம் ஆண்டு முதல் மாணவர்களின் விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் விவரங்கள் மற்றும் முக்கியமாக வங்கி கணக்கு, வங்கி சார்பான விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்து 30-06-2022 அன்று மாலைக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் தனி நபர் மூலமாக அனைத்து விவரங்களும் சரியாக உள்ளது என சான்றிதழ் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருத்தங்கள் இருப்பின் கீழ்க்காணும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்பான தனி கவனம் செலுத்தி இன்றே இப்பணியினை மேற்கொள்ளுமாறும் சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு 2022-2023 (தேர்வு நடைபெற்ற நாள் 05-03-2022) தேர்வு முடிவுகள் வெளியிடுதல்.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 05-03-2022 அன்று நடைபெற்று முடிந்த தேவிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (2022-2023) முடிவுகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணை நகல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்துவகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு NMMS-result-2022-Selected-Students-letter-to-all-CEOSDownload NMMS-MAR-2022-SELECTED-CANDIDATES-LISTDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியக்ள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

பள்ளிக்கல்வி – மானியக் கோரிக்கை – 2022-2023ஆம் கல்வியாண்டு – சதுரங்க ஒலிம்பியாட் – பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் சார்பாக அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1 மற்றும் 2), உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 01.07.2022 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி நடைபெறுதல் – பணியிலிருந்து விடுவித்து அனுப்ப தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – மானியக் கோரிக்கை – 2022-2023ஆம் கல்வியாண்டு – சதுரங்க ஒலிம்பியாட் – பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் சார்பாக அனைத்து அரசு நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1 மற்றும் 2), உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 01.07.2022 அன்று ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி வேலூர், அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இப்புத்தாக்க பயிற்சியில் கொள்ளும் பொருட்டு உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை 1 மற்றும் 2), உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்களை உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ள

10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு கால அட்டவணை வெளியிடுதல் சார்பு

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த பொதுத் தேர்வுகள் தொடர்பாக பெறப்பட்ட தேர்வு முடிவுகள் தொடர்ந்து தேர்வில் தொல்வியுற்ற மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகை மூலம் அறியும் வண்ணம் செயல்படுமாறு அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு PRESS-NOTIFICATIONDownload 2-Supplementary-Exam-July-2022-1Download 1-Supplementary-Exam-August-2022-1Download SSLC-Supplementary-Exam-August-2022-1Download

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் – (27-06-2022 அன்று மாலை 04.00 மணிக்கு) இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மட்டும் கட்டாயம் கலந்துக்கொள்ள கோருதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக பெறப்பட்ட தேர்வு முடிவுகளை தொடர்ந்து இணைப்பில்காணும் உயர்நிலைப் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் அனைவரும் 27-06-2022 அன்று வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் கூட்டம் பொருள் சார்பான செயல்முறை கடிதம், பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்- முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் இணைப்பு COLLECTOR-MEETING-LETTER-2022Download HR-SEC-SCHOOL-NAME-LIST-2022Download HIGH-SCHOOL-NAME-LIST-2022Download பெறுநர் இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெ

பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் தொடர்பாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் / விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்பான செய்தி

அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் தொடர்பாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல் / விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்பான செய்தி சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் செய்திக்குறிப்பு இணைத்து அனுப்பலாகிறது. இணைப்பு 2-Scan-Copy-Instructions-to-HMsDownload 2-Statement-of-Marks-Downloading-for-Students-SchoolsDownload Scan-Copy-RT-Provisional-CertifcateDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறு

அனைத்துவகை அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்/ சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு உலக திறனாளர்கள் கண்டறிந்து (Battery of Test) – விவரம் வழங்கிடக் கோருதல்

அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்/ சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு அனைத்துவகை அரசு / நகரவை / ஆதிதிராவிடர் நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள்/ சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ பள்ளிகளில் 6,7 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு உலக திறனாளர்கள் கண்டறிந்து (Battery of Test) – விவரம் வழங்கிடக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். BATTERY-TEST-PROCEEDINGSDownload FORMATDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை பொதுத் தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு உயிரியல் / தாவரவியல் / விலங்கியல் முதுகலை ஆசிரியர்கள் ஒதுக்கீடு பெறப்படாதவர்கள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மதிப்பீட்டு பணி மேற்கொள்ள தெரிவித்தல் சார்பு.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் மேல்நிலை பொதுத்தேர்வு மைய மதிப்பீட்டு பணிக்கு உயிரியல் தாவரவியல் விலங்கியல் மதிப்பீட்டு பணி மேற்கொள்ள ஆசிரியர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் மதிப்பீட்டுப் பணிக்கு 04-06-2022 பிற்பகல் 02.00 மணிக்கு மதிப்பீட்டு பணி மேற்கொள்ளுவம் வகையில் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்குமாறு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் 1.மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது