மற்ற செய்திகள்

பள்ளிக்  கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருட்கள்  தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை –  நிகழ்ச்சியின்  விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படமாகவும் – ஒப்படைக்காத பள்ளிகள் இன்று 17.04.2025 மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் – தொடர்பாக

2024-2025ம் கல்வியாண்டில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருட்கள்  தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட  விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படத்துடன் இவ்வலுவலக ஆ5 பிரிவில் 16.04.2025-க்குள் ஒப்படைக்குமாறு 15.04.2025 அன்று இவ்விணையதளம் வாயிலாக அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை கீழ்காண் பள்ளிகளிடமிருந்து அறிக்கைகள் மற்றும் புகைப்படங்கள் பெறப்படவில்லை. எனவே கீழ்காண் பள்ளி தலைமையாசிரியர்கள் கோரப்பட்ட விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படமாகவும் இவ்வலுவக ஆ5 பிரிவில் இன்று (17.04.2025) மாலை 4.00 மணிக்குள் தவறாமல் ஒப்படைக்குமாறு மீள தெரிவிக்கப்படுகிறது. ghs elavambadi 2. ghs serpadi 3. ghs peenjamandhai 4. ghs thirumani 5. ghs machanur

வராண்டா / மரத்தடியில் மாணவர்கள் பயின்றுவரும் பள்ளிகளின் விவரம் இணைப்பிலுள்ள கூகுள் படிவத்தில் உள்ளீடு செய்தல் – தொடர்பாக

https://docs.google.com/spreadsheets/d/1L5wr9K6LgvXu8pPKdEC7XwM89glNkfvMiBueery6ZBo/edit?gid=0#gid=0 முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி-வேலூர் மாவட்டம்-கல்வி உதவித் தொகை-பெண் கல்வி ஊக்கத் தொகை- மாணவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் சீடிங் செய்ய தெரிவித்தல்- வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு இந்தியன் போஸ்டல் வங்கியில் (Indian Postal Bank) புதிய கணக்கு தொடங்க அறிவுறுத்தல் – மாணவர்களுக்கு eKyc Verification செய்ய தெரிவித்தல்-சார்பு.

3898.B2.15.04.2025Download high.highersec.schools.scholarship.13.04.2025 (1)Download PRIMARY.MIDDLESCHOOLS.scholarship.13.04.2025Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் POCSO தொடர்பாக பள்ளி ஒருங்கிணைப்பாளர்களின் விவரம் – கோருதல் – சார்பு

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் POCSO தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளி ஒருங்கிணைப்பாளர்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ள Online Google Link-ல் உடனடியாக பூர்த்தி செய்யுமாறு அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. https://docs.google.com/spreadsheets/d/1D-h7YtpheDutd8DRnrFM90nqtv270jM6pjBJBg5xG8U/edit?usp=sharing //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்  கல்வி – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் அரசு/ அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் போதைப்பொருட்கள்  தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை –  நிகழ்ச்சியின்  விவரத்தினை அறிக்கையாகவும் மற்றும் புகைப்படமாகவும் – ஒப்படைக்க கோருதல் – சார்பு

1224.B5.15.04.2025 (anti drug details reg )Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் – தலைமையாசிரியர், அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் ப்ரி மெட்ரிக்(Pre-matric) மற்றும் போஸ்ட் மெட்ரிக்(Post-matric) கல்வி உதவித்தொகை மாணவர்களின் விவரங்களை EMIS வலைத்தளத்தில் சரிபார்த்தல்-சார்பாக.

அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு. 3898.scholarshipDownload Prematric post matric scholarshipDownload /ஒப்பம்/ முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பள்ளிக் கல்வி – தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் HCL நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான HCL Techbee Training – அரசுப் பள்ளிகளுக்குச் சென்று பயிற்சி பற்றிய ஆலோசனை மற்றும் மதிப்பீடு நடத்துதல் – தொடர்பாக

HCL Techbee TrainingDownload //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம். பெறுநர் தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

பள்ளிக் கல்வி – வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் –  பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் – புத்தாக்க கண்டுபிடிப்பிற்கு தேவையான பிரச்சனைகளை கண்டறிய மாநில அளவிலான கருத்துப்பட்டறை ஏப்ரல் 22ஆம் தேதி நடத்துதல் – தொடர்பாக

3452.B5.02.04.2025 (SIDP State Level Workshop)Download //ஒப்பம்// முதன்மைக் கல்வி அலுவலர் (பொ),            வேலூர். பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள், வேலூர் மாவட்டம். நகல் – தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களுக்கு  தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி) வேலூர் மாவட்டம் (இவ்லுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி –  ஆதிதிராவிடர் நலம் – வேலூர் மாவட்டம் – 2024-2025ஆம் கல்வியாண்டு – அனைத்து அரசு / நகரவை/ ஆதிதிராவிட நல / நிதியுதவி பெறும் அரசு / மேல்நிலைப் பள்ளிகளின்  12-ஆம் வகுப்பு  மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) முகாம் 29.03.2025 அன்று காலை 9.00 மணியளவில் வேலூர்  Dr. R. Jayakaran Issac Indoor Auditorium Voorhees College, Deboer Campus-ல் நடைபெறுதல் – மாணாக்கர்களை கலந்துக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக

1479.B5.27.03.2025 (Career guidance for 12std students)Download பெறுநர் – தலைமையாசிரியர்கள், அனைத்து அரசு / நகரவை / ஆதிதிராவிட நல / நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள்,   வேலூர் மாவட்டம். நகல் – வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக்  கல்வி) வேலூர் மாவட்டம். (தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு) (இவ்வலுவலக மின்னஞ்சல் மூலமாக)

பள்ளிக் கல்வி –  வேலூர் மாவட்டம் – தினத்தந்தி மற்றும் VIT பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும்  – வெற்றி நிச்சயம் என்ற நிகழ்ச்சி 26.04.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறுதல் – தொடர்பாக

1425.B5.25.03.2025 (தினத்தந்தி மற்றும் VIT வெற்றி நிச்சயம்)Download பெறுநர் – தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், அனைத்து அரசு / நிதியுதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்  / தனியார் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.