தேர்வுகள் -பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மார்ச் /ஏப்ரல் – 2025 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) பதிவிறக்கம் செய்தல் –பள்ளிகளுக்கு தெரிவித்தல் –தொடர்பாக
அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் /ஏப்ரல் – 2025 மாதத்தில் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான தேர்வு முடிவுகள் நாளை 16.05.2025 அன்று வெளியிடப்படவுள்ளது. பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து 16.05.2025 அன்று காலை10.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ,அதே போல் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்தொடர்பான பள்ளி அளவில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML COPY ) -னை 16.05.2025 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
