Month: July 2022

இன்று (02.07.2022) முற்பகல் 11.00 மணி முதல் 11.30 வரை அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 11.30 மணி முதல் அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் இணைய வழி கூட்டம் (Google meet) முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறுதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, இன்று (02.07.2022) முற்பகல் 11.00 மணி முதல் 11.30 வரை  அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான இணைய வழி கூட்டம் (Google meet) முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று (02.07.2022) முற்பகல் 11.30 மணி முதல் அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/அரசு நிதியுதவி உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான இணைய வழி கூட்டம் (Google meet) முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. தலைமையாசிரியர்கள் அனைவரும் தவறாமல் இணைய வழிக்கூட்டத்தில் (Google Meet) கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click  செய்து கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் https://meet

பள்ளிகளில் உள்ள மேலாண்மைக்குழு வங்கிக்கணக்கு – வட்டார வளமையங்களில் உள்ள வங்கி கணக்குகளில் உள்ள தொகைகளை திரும்ப செலுத்துதல் மற்றும் வங்கிக் கணக்குகளை முடிவு செய்தல் (Closure)

CIRCULARS
அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளிகளில் உள்ள மேலாண்மைக்குழு வங்கிக்கணக்கு - வட்டார வளமையங்களில் உள்ள வங்கி கணக்குகளில் உள்ள தொகைகளை திரும்ப செலுத்துதல் மற்றும் வங்கிக் கணக்குகளை முடிவு செய்தல் (Closure) சார்பாக இணைப்பில் உள்ள கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ளஅறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SS-VELLORE-FINANCIAL-CEO-PROCEEDINGSDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 கீழ் தகவல் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் திருமதி/செல்வி க.திவ்யா என்பார் கோரிய தகவல்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் பிரிவு 6(3)ன் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தகவல் கோரும் இம்மனு இணைத்து அனுப்பப்படுகிறது. இம்மனுவில் கோரியுள்ள தகவல்களை மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் அனுப்பிவிட்டு அதன் நகல் ஒன்றினை இவ்வலுவலகம் அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இதில் காலதாமதம் ஏற்படின் தாங்கள் முழு பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2093-a4-RTIDownload RTI-2005_20220701_0001Download

2021-2022 தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வு பிப்ரவரி 2022 (TRUST EXAM) தெரிவு செய்யப்பட்ட மாணவ/ மாணவியர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல் மற்றும் தற்போது பள்ளியில் பயில்வதற்கான சான்று படிவம் வழங்க கோருதல்

இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு பிப்ரவரி 2022ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ / மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வு தொடர்பான தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. தற்போது 2022-2023ம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் பயில்கிறார்கள் என்பதற்கான சான்று படிவத்தினை பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு trust-2022-pdfDownload TRUST-2022-1Download முதன்மைக் கல்விஅலுவலர்வேலூர் பெறுநர் இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு 2022 – தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டமை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகளை தொடர்ந்து மறுகூட்டல் மற்றும் விடைத்தாள்நகல் வழங்ககோரி விண்ணப்பங்கள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக மூலம் கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1-May-2022-Scan-Coopy-RT-1-Letter-to-CEODownload Scan-Copy-RT-Fees-Payment-Karuvoolam-InstructionsDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல்

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 2022 வெளியிடப்பட்டமை – தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்துதல் விண்ணப்பம் பெறுதல் – சார்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 2022ம் மாதம் நடைபெறவுள்ளது. அத்தேர்வு எழுதுவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 1-Auguest-2022-Examinations-ApplicationDownload 1-August-2022-Exam-Fees-Payment-Karuvoolam-InstructionsDownload 1-August-2022-Nodal-Centre-InstructionsDownload 1-August-2022-Private-Candidate-InstructionsDownload 1-Equivalent-subjectsDownload 1-

பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் நிதியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – பழுது நீக்கம் செய்ய வேண்டிய கட்டிடங்கள் சார்பான விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் நிதியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – பழுது நீக்கம் செய்ய  வேண்டிய கட்டிடங்கள் சார்பான விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு புகைப்பட நகலுடன் 08.07.2022க்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்டைக்குமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். M&R-ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்