2021-2022 தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வு பிப்ரவரி 2022 (TRUST EXAM) தெரிவு செய்யப்பட்ட மாணவ/ மாணவியர்கள் பெயர் பட்டியல் வெளியிடுதல் மற்றும் தற்போது பள்ளியில் பயில்வதற்கான சான்று படிவம் வழங்க கோருதல்

இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

பிப்ரவரி 2022ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஊரகப் பகுதி மாணவ / மாணவியர்களுக்கான திறனாய்வுத் தேர்வு தொடர்பான தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. தற்போது 2022-2023ம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் பயில்கிறார்கள் என்பதற்கான சான்று படிவத்தினை பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்விஅலுவலர்வேலூர்

பெறுநர்

இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.