NMMS-பிப்ரவரி -2023 பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய -கூடுதல் அவகாசம் -27.01.2023 பி.ப. வரை நீட்டிப்பு -தெரிவித்தல் -சார்பு

அனைத்து நடுநிலை/உயர்நிலை /மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

NMMS -2022-2023 ஆண்டிற்கான தேர்வு 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவௌள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்கள் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 25.01.2023 என தெரிவிக்கப்பட்டது.

தற்போது இத்தேர்விற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 27.01.2023 பிற்பகல் 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்கு பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை உரிய இணைப்புச் சான்றிதழ்களுடன் தங்கள் வசம் வைத்துக்கொண்டு Summary Report மட்டும் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 01.02.2023க்குள் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து நடுநிலை/உயர்நிலை /மேல்நிலை மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.