ALL MATRIC SCHOOL PRINCIPALS
DOWNLOAD AND FILL THE FORM ENCLOSED AND SEND THE FORM THROUGH COURIER OR POST TO THIS OFFICE BEFORE 4.00 PM ON 20.07.2018.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CEO, VELLORE.
அனைத்து அரசு/அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு,
கருவூலம் மற்றும் கணக்குத்துறை-ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்துதல்-வேலூர் மாவட்டம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கூட்டம்-17.07.2018 அன்று VIT அண்ணா கூட்ட அரங்கில் காலை9.30 மணிக்கு நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING TRY MEETING @ VIT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள்,
2018 மார்ச்/ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வினை எழுதிய அனைத்து மாணாக்கருக்கும் 16.07.2018 அன்று காலை 10.00மணி முதல் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யப்படும். தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனித்தேர்வர் மைய தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்விஅலுவலகத்தில் நாளை 14.07.2018 அன்று தங்கள் பள்ளி மாணாக்கர்களுடைய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு,
ராஜ்புரஷ்கார் விருது தேர்வுக்கான ஒருநாள் ஆயத்த பயிற்சி முகாம் 15.07.2018 அன்று வேலூர், ஊரீஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEIDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
11ம் வகுப்பு புதிய பாடநூல் குறித்து முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி இணைப்பில் உள்ள புதிய கால அட்டவணை படி இரண்டு மையங்களில் (இணைப்பில் கண்டுள்ளபடி) நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. சார்ந்த ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE MODIFIED SCHEDULE
பயிற்சி நடைபெறும் இரு மையங்களிலும் கருத்தாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி சிறப்பாக நடைபெற கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
புதிய பாடநூல் குறித்து 09.07.2018 முதல் 13.07.2018 (இன்று) வரை நடைபெற்ற முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர்களுக்கான புதிய பாடப்புத்தகம் குறித்த பயிற்சியில், பயிற்சியளித்த மாநில கருத்தாளர்கள் மற்றும் மாவட்ட கருத்தாளர்கள் ஆகியோருக்கான கூட்டம் இன்று (13.07.2018) பிற்பகல் 4.00 மணி அளவில் பள்ளிக்கல்வி செயலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக ‘A’ Block, 5வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியரிகளையும் விடுவித்தனும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(தொலை தூரத்தில் இருந்து வரவேண்டியவர்கள் வர வேண்டாம்)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
14.07.2018 அன்று பள்ளி வேலை நாள் என்பதால் தேர்வு நிலை/ சிறப்புநிலை/தகுதிகான்பருவம்/ பணிவரன்முறை கருத்துருக்களை முழுமையாக பள்ளி அமைச்சுப்பணியாளர் மூலம் அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (கண்டிப்பாக ஆசிரியர்களை அனுப்பிவைத்தல் கூடாது)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலுர்