திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டம் – பாரத சாரண, சாரணியம் – இராஜ்ய புரஷ்கார் விருது (ஆளுநர் விருது) ஆயத்த முகாம் 22.07.2018 அன்று ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டையில் நடைபெறுதல்
அனைத்துவகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் இராஜ்யபுரஷ்கார் விருது பெற விண்ணப்பித்துள்ள சாரண, சாரணியர்களுக்கு 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது. தேர்வு முகாமிற்கு முன் ஒரு நாள் ஆயத்த முகாம் 22.07.2018 அன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லூர்பேட்டையில் நடைபெற உள்ளது. விண்ணப்பித்துள்ள அனைத்து சாரண, சாரணியர்களும் இந்த முகாமில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். முகாமிற்கு வரும் சாரண, சாரணியர் அனைவரும் முழுச்சீருடையில் வரவேண்டும். முகாமிற்கு வரும்போது Log Note, Good Turn Note, மூன்று மீட்டர் கயிறு, சாரண தண்டம், கையேடு, பேனா கொண்டுவருதல் வேண்டும். முகாமிற்கு வரும் சாரண, சாரணியர்கள் மதிய உணவு கொண்டுவருதல் வேண்டும்.
முகாம் நேரம்: காலை 9.30 மணி

