EXAMINATION

TRUST EXAMINATION -டிசம்பர் 2022 தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு –தேர்வு மையம் –விவரம்  மாணவர்களுக்கு தெரிவித்தல் –சார்பு

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு(TRUST)10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள தேர்வுமையங்களின் பட்டியல் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரம் , தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தினை தெரிவித்திடுமாறு சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     4509-CENTRE-and-clubbing-schools-vellore-districtDownload TRUST-DEC-2022-CENTRE-AND-SCHOOL-CLUBBING-Vellore-DistrictDownload ஒம்.க.முனுசாமி முதன்மைக்கல்வி அலுவலர் வேலூர். பெறுநர் தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா. சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா. நகல்: மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை )  தொடர் நடவடிக்கைக்காக.

வேலூர் மாவட்டம் – பள்ளிக் கல்வி – மேல்நிலைக்கல்வி -2022-2023 ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்கு –பெயர்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்களை விடுவித்து அனுப்புதல் -சார்பு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள முதுகலை  பாட ஆசிரியர்கள் நாளை 26.11.2022 அன்று காலை நடைபெறும் உயர் கல்வி போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக பெயர்பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்களை இன்று மாலை பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அரசு மற்றும் அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PG-Teachers-Name-ListDownload மாணவர்கள் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது 1-student-list-Download 2-Student-listDownload பெறுநர் சார்ந்த அரசு, அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம் . நகல், வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு (இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத்தேர்வுகள் – மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்குதல் ,அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் –தெரிவித்தல் -சார்பு  

 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு  அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்கும் முறை இணைக்கப்பட்டுள்ள , நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு சரியாக பின்பற்றி செயல்படுமாறு அனைத்து அரசு, நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.    Internal-Mark-Proceeding-1Download G.O.-2D-No.13-School-Education-date.20.02.2018Download Internal-Mark-Code-for-1Download Internal-Mark-Code-for-2Download Internal-Mark-Instructions-1-and-2Download முதன்மைக் கல்வி அலுலவர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு, நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் , வேலூர் மாவட்டம். நகல் - மாவட்டக் கல்வி அலுவலர், (இடைநிலைக் கல்வி / தனியார்பள்ளி) வேலூர் மாவட்டம்.

நினைவூட்டு -1 வேலூர் மாவட்டம் – தேர்வுகள் 2022 – 2023 -ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் – EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு –கூடுதல் தகவல்கள் தெரிவித்தல் – சார்பு.

NOMINAL-ROLLDownload 4678-10-11-Nominal-Roll-1Download 2023-NR-Proceeding-instruction-to-all-HMs-1-1Download ஒப்பம் முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றம் மெட்ரிக் முதல்வர்கள், வே.மா.

இரண்டாம் இடைப்பருவத்தேர்வு -நவம்பர் 2022

அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு…. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google -Sheet ல் தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் பருவத் தேர்வு முடிந்து விடைத்தாள்களை திருத்திய பின்னர் பள்ளி அளவில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்ய வேண்டும் என அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://docs.google.com/spreadsheets/d/1TtF25q5QnTXQJszwcI0NQnxRLDoxLOL2lusm12FulQw/edit?usp=sharing முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து அரசு /நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச் /ஏப்ரல் 2022 –மேல்நிலை முதலாமாண்டு CBSE பாடத்திட்டம் /வேறு மாநில பாடத்திட்டம் –மேல்நிலை இரண்டமாண்டு தமிழக பாடத்திட்டத்தில் தேர்வெழுதுதல் –உரிய ஆவணங்கள் சமர்பிக்க கோருதல் -சார்பு

CBSC-STUDENTS-NR-REGDownload DECLARATION-FORMDownload மேற்காணும் அரசுத் தேர்வுகள் இணை இயக்குநர் (மேல்நிலை ) அவர்களின் கடிதத்தில் தெரிவிதுள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறும் , 24.11.2022-க்குள் இரண்டு பிரதிகளை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்குமாறு சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், சார்ந்த மேல்நிலை தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் மாவட்ட கல்வி அலுவலர்(தனியார்) தகவலுக்காகவும், தொடர்நடவடிக்கைகாவும் அனுப்பலாகிறது.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை வெளியிடுதல்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. கால அட்டவணையின்படிதேர்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆய்வு அலுவலர்களின் வருகையின்போது அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறவில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. இணைப்ப தேர்வுகள் கால அட்டவணை Second-Mid-term-time-tableDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை / தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவ

2022-2023 கல்வியாண்டு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் ( Trust Exam) தேர்வு டிசம்பர் 2022 – EXAM DATE 10-12-2022 – விண்ணப்பங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4509-TRSUT-EXAMINATIONDownload TRUST-PORCEDEREDownload G.O.NO_.256-2Download G-.O.-NO.-960-2Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

2022-2023ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பு

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 2022-2023ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாமாண்டு பயிலும் பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான அறிவுரைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 4478-NR-1Download பெறுநர் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்விஅலுவலர் (இடைநிலை/ தனியார் பள்ளிகள்) தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் / ஏப்ரல் 2023- புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் – கருத்துரு அனுப்ப கோருதல்

அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 4418-SSLC-2022-1Download proposal-formatsDownload G.O.602Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை உயர், மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலைமற்றும் தனியார் பள்ளிகள்) வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. குறிப்பு பள்ளிகளிலிருந்து கருத்துருக்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கூடாது மாவட்டக் கல்வி அலுவலகத்தில் மட்டுமே ஒ