EXAMINATION

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் –கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் – அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு VLR-Nominal-Roll-Extend-ProceedingsDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் : மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் ) வே.மா, தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

2022-2023- அரையாண்டு தேர்வு – தேர்வு கால அட்டவணை -அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத்  தேர்வுகள் நடத்துதல் மற்றும் தலைமை   ஆசிரியர்களுக்கு  அறிவுரைகள் வழங்குதல் –சார்பு 

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, 2022-2023- அரையாண்டு தேர்வு , தேர்வுகால அட்டவணையின்படி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மேலும் கீழ்காணும் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு  அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் 6 முதல் 10 வகுப்பு மாணவ/மாணவிகளுக்கு 15.12.2022 அன்று Optional Language நடைபெறும் என்று தெரிவிக்கலாகிறது. half-yearly-exam-time-tableDownload    ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி  அலுவலர்,   வேலூர்.    பெறுநர் அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,வே.மா நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தனியார் )அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

நினைவூட்டு –EBS –DATA as on 01.12.2022 நிலவரப்படி -வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோரப்பட்டது –தொடர்பாக

                       வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு தெரிவ்க்கப்பட்டது .ஆனால் இதுநாள் வரை சில பள்ளித் தலைமை ஆசிரியர்கள் , தங்கள் பள்ளிக்குரிய ஆசிரியர்கள் (ம ) பணியாளர்களின் விவரங்களை Google Forms –ல் உள்ளீடு செய்யாமல் இருப்பது வருந்தத்தக்க செயலாகும்.மேற்காண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டி உள்ளதால் காலதாமதத்தினை தவிர்க்கவும்.                மேலும் உடனடியாக தங்கள் பள்ளியில் உள்ள

தேர்வுகள் –வேலூர் மாவட்டம் -2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள்-பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் –EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் -மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மானவர்களின் சலுகைகள் கோரும் தேர்வர்கள் விவரம் –கோருதல் –சார்பு  

4678-_10-th-and-11th-nominalDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை உயர்,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ,வே.மா. நகல், வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார்) தொடர்நாடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.

அவசரம் – மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு -மார்ச்  2023  – DCS REPORT வெளியிடுதல்-சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு  மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச்  2023  தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக   DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மைய பள்ளிகள் விவரம், மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தங்கள் பள்ளி சார்பான விவரங்கள் சரியாக இருப்பின் Verified and Found Correct என பதிவு மேற்கொண்டு தலைமைஆசிரியரின் முத்திரை மற்றும் கையொப்பத்துடன் இவ்வலுவலகத்திற்கு ஒரு நகல் தவறாமல் சமர்பிக்கப்பட வேண்டும். தொடர்புக்கு : 8825004447 /9791888163 HSE2_DCS_2023_29A_VELLOREDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர

TRUST-தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு- 17.12.2022(சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்ற விவரம் தெரிவித்தல் -சார்பு

மேற்காணும் பொருள் சார்பாக நாளை 10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத்திறனாய்வுத் தேர்வு (Trust Examination) புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக 17.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்ற விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் வேலூர் மாவட்டம். நகல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு( இடைநிலை/தனியார் ) தகவல் மற்றும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு.

TRUST EXAMINATION –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு–டிசம்பர் 2022 –10.12.2022-தேர்விற்கான அறிவுரைகள் விவரம் தெரிவித்தல்-சார்பு

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு(TRUST)10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  தேர்வர்கள் OMR விடைத்தாளில் தாம் எந்த கலத்திற்கான விடை சரி என நினைக்கிறாரோ அந்த கலம் கருப்பு மை பந்துமுனை ( BLACK BALL POINT PEN) பேனாவில் மட்டுமே நிழற்படுத்த வேண்டும் என தங்கள் பள்ளியில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு  அறிவுறுத்துமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.      ஓம்.க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு

TRUST EXAM – தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) –டிசம்பர் 2022 –10.12.2022 –தேர்வுமைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –சார்பு

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு(TRUST)10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.  இத்தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை  www.dge .tn.gov.in என்ற இணையதளத்தில் 02.12.2022 பிற்பகல் முதல் தங்கள் பள்ளிக்கான User ID /         Password –ஐ   கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. trust-2022-2023-Hall-Ticket-Download-Instructions-Download ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் பெறுநர்: தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா. சார்ந்த உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா. நகல்: மாவட்டக் கல்வி அலுவலருக்கு (இடைநிலை )  தொடர் நடவடிக்கைக்காக.

EBS DATA as on 01.12.2022-தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  உள்ளீடு செய்ய கோருதல்

மார்ச் /ஏப்ரல் -2023 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் தொடர்பாக 2022-2023 ஆம் கல்வியாண்டில்       01-12-2022 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவிப் உயர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். EBS-MARCH-APRIL-2023Download https://forms.gle/qzeAuXSbGs4fvrtFA ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள், வேலூர் மாவட்டம்.   நகல், மாவட்ட கல்வி அ

தேர்வுகள் –வேலூர் மாவட்டம்-2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் –பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் –EMIS விவரங்கள் அடிப்படையில் தயாரித்தல் மற்றும் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் –கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் – அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

4728-Nominal-Roll-Date-ExtendedDownload ஒப்பம் க.முனுசாமி முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா. நகல் : மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் ) வே.மா, தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.