வேலூர் மாவட்டம் – 2026-2027ஆம் கல்வியாண்டு பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து அரசு/நகரவை உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் , பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் (நிலை1 மற்றும் 2) ஆகியோர்களின் பொதுமாறுதல் கலந்தாய்விற்கான தரவரிசை முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களுடைய EMIS எண் மற்றும் Password பயன்படுத்தி உள்ளீடு செய்து சரிப்பார்த்து, திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் Challenge என்ற OPTION -னை பயன்படுத்தி திருத்தங்கள் உள்ளீடு செய்து சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர் மாவட்டம்.