Month: October 2021

அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – விவரம் கோருதல்

அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – விவரம் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் MR-ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

வேலூர் மாவட்டம் – மூலிகை கொசு ஒழிப்பான் மருந்தினை – மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்  கொண்டு, அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் வாங்கி தெளித்திட அறிவுறுத்தல் – சார்பு.

பள்ளிக் கல்வி – மூலிகை கொசு ஒழிப்பான் மருந்தினை – மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில்  கொண்டு, அனைத்து தனியார் மற்றம் அரசு பள்ளிகளில் இணைப்பில் கண்டுள்ள மகளிர் உரிமை கழகத்தில் வாங்கி தெளித்திட – பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. DocScanner-28-Oct-2மூலிகை-கொசு-ஒழிப்பான்021-16.45Download முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர், அனைத்து அரசு/ உயர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல். மாவட்டக் கல்வி அலுவலருக்கு,தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தீபாவளி பண்டிகை 2021 கதர் சிறப்பு விற்பனை – சார்பாக. –

வேலூர் மாவட்டம் – தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் தீபாவளி பண்டிகை 2021 கதர் சிறப்பு விற்பனையினை அதிகரிக்க வேலூர் மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள் COLLECTORE-PROCEEDINGS-KADARDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர், அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காக அனுப்பபடுகிறது.

மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வு – மார்ச் 2021 – மாணவர்கள் பெயர் பட்டியல் – திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக.

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு... மார்ச் 2021ல் நடைபெற்ற மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத் தேர்வில் பங்குபெற்ற மாணவர்கள் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மீள ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே மாணாக்கர்களின் மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து, திருத்தங்கள் இருப்பின், திருத்தங்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் Examination-3276-B4Download

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் – அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் – 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் – சார்பு

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டு 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து அரசு / அரசு நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். POWER-FINANCE-bank-details-emis-entry-proceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமத்தால் அறிமுகப்படுகத்தப்பட்ட புதிய வகையான விளையாட்டுகள் – அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் – உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான இரண்டு நாட்கள் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் சார்பாக

CIRCULARS
அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமத்தால் அறிமுகப்படுகத்தப்பட்ட புதிய வகையான விளையாட்டுகள் – அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் – உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான இரண்டு நாட்கள் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். PET-PD-TRAINING-PROCEEDINGSDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 – 01.08.2021 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் சார்ந்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம் மற்றும் பணியிட விவரம், காலி பணியிட விவரம் 27.10.2021 காலை 11.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல் சார்ந்து.

CIRCULARS
அனைத்து அரசு / நகராட்சி மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, 01.08.2021 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 - மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் சார்ந்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பணியிட விவரம் மற்றும் காலி பணியிட விவரம் 27.10.2021 நாளை காலை 11.00 மணிக்குள் அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் EMIS - P.G. 01.08.2021-ltrDownload EMIS-P.G.-01.08.2021-formatDownload

தொடக்க கல்வி 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – பள்ளிகளில் செய்துள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு இணைப்பில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் நியமனம் செய்து ஆணையிடுதல் தொடர்பாக

தொடக்க கல்வி 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - பள்ளிகளில் செய்துள்ள முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு இணைப்பில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் நியமனம் செய்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ளவாறு பள்ளிகள் ஆய்வு செய்து அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து உடன் வேலூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 2 நகல்களில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 3140-B2-1-1Download HMS-LISTDownload FORMOT-OF-FORMDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் தலைமைஆசிரியர்கள் அனைத்து வகை அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளி நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

MOST URGENT -மெட்ரிக் பள்ளிகளுக்கான 2020 – 2021 RTE தொடர்பான கூட்டம் – நாளை காலை 10 மணிக்கு அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல்- அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகளுக்கான 2020- 2021 RTE தொடர்பான கூட்டம் - நாளை காலை 10 மணிக்கு அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுதல்- அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் தங்கள் பள்ளிக்குரிய RTE 2020-2021 CLAIM FORM மற்றும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் உடன் கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது. இடம் - அரசு முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி நேரம் - காலை 10 மணி முதல் மதியம் 2.00 மணி வரை குறிப்பு : மேலும் அனைத்து சிறுபான்மைப் பள்ளிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் RTE 2020- 2021 ஆம் ஆண்டிற்குரிய தொகையினை வெகு விரைவில் பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவுள்ளதால் சார்ந்த பள்ளிகள் தங்கள் பள்ளிக்குரிய கேட்பு தொகையினை சரிபார்த்து கையொப்பமிட்டு செல்ல அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் / தாளாளர்கள்

மெட்ரிகுலேசன் பள்ளிகள் – 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மலையாளம், தெலுங்கு, கன்னடம்,உருது, குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் ஆகிய சிறுபான்மை மொழி பாட நூல்களின் தேவைப்பட்டியல் கோருதல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிகுலேசன் பள்ளிகள் - 2022 -2023 ஆம் கல்வியாண்டிற்குரிய மலையாளம், தெலுங்கு, கன்னடம்,உருது, குஜராத்தி, இந்தி,பிரஞ்சு மற்றும் அரபிக் ஆகிய சிறுபான்மை மொழி பாட நூல்களின் தேவைப்பட்டியல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து உரிய தேதிக்குள் ஒப்படைக்க அனைத்து மெட்ரிக்/ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். OTHER-LANGUAGE-BOOKS-INDENTDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர், தாளாளர்கள் / முதல்வர்கள் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நகல் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.