அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
| பள்ளிக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் இதர கட்டிட கூடுதல் வகுப்பறைகளுக்கு தளவாட சாமான்கள் ( Desk, Bench ) தேவைப்படும் பள்ளிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல் (படிவம் -1 மற்றும் படிவம் -2) 06.06.2026 அன்று மாலை 3.00 மணிக்குள் பூர்த்தி செய்ய தெரிவிக்கப்படுகிறது. மேலும் இணைக்கப்பட்டுள்ள படிவம் – 1 மற்றும் 2 பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக அ5 பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு : 1. படிவம் -1 -இல் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்கு தளவாட சாமான்கள் (Desk, Bench) தேவைப்படும் பள்ளிகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 2. படிவம் -2 -இல் நபார்டு திட்டத்தை தவிர்த்து இதர திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வகுப்பறைகளுக்கு தளவாட சாமான்கள் (Desk, Bench) தேவைப்படும் பள்ளிகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். |
https://docs.google.com/spreadsheets/d/1Df87TAX73erKGp04sfkITIsQ1lnfVVCv3MVJLLy2wD8/edit?usp=sharing
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்
