அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் /பதவிஉயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் நியமனம் – தமிழ், ஆங்கிலம்,கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாட முன்னுரிமைப்பட்டியல் அனுப்புதல்-இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் 07.03.2022 அன்று காலை 9.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பு.

அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் 01.01.2021 நிலவரப்படி பணிமாறுதல் /பதவிஉயர்வு மூலம் முதுகலை ஆசிரியர் நியமனம் சார்ந்து தமிழ், ஆங்கிலம்,கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், மனையியல், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பாட முன்னுரிமைப்பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னரிமைப்பட்டியல்களை பதிவிறக்கம் செய்து பட்டியலில் இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் 07.03.2022 அன்று காலை 9.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் பணி விடுவித்தனுப்புமாறு அரசு/நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்