CIRCULARS

கைரேகை வருகை பதிவு (Bio Metric attendance) சார்ந்த அறிவுரைகள்

கைரேகை வருகை பதிவு (Bio Metric attendance) சார்ந்த அறிவுரைகள்

CIRCULARS
1)  அனைத்து வகை சார்நிலை அலுவலர்கள்/ அலுவலக பணியாளர்கள், 2) அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்   கைரேகை வருகை பதிவு (Bio Metric attendance) சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்து சார்நிலை அலுவலர்கள்/ அலுவலக பணியாளர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்/ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2019 – தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கவனத்திற்கு ஜூன் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் 10-07-2019 அன்று பிற்பகல் 02.00 மணிக்கு www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து ஆன்லைனில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலும் தேர்வு முடிவுகள் தொடர்ந்து விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு 11.07.2019 மற்றும் 12.07.2019 ஆகிய இரண்டு நாட்களில் நேரில் வருகைபுரிந்து உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.   மேற்குறிப்பிட்டுள்ள விவரங்கள் பொது மக்கள் மற்றும் மாணவர்கள் அறியும் வகையில் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09-07-2019  அன்று  நடைபெற்றமை , கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளி தலைமை ஆசிரியர்கள்  உரிய விளக்க கடிதத்துடன்  11-07-2019 மாலை 5.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு வருகைபுரிய வேண்டும்.

கீழ்க்காணும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்தற்கு மார்ச்/ஏப்ரல் 2019 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 70 மற்றும் 70க்கும் குறைவான தேர்ச்சி விழுக்காடு பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 09.07.2019 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு வருகை புரியாத பள்ளிதலைமை ஆசிரியர்கள் உரிய விளக்க கடிதத்துடன் 11-07-2019 அன்று மாலை 05.00 மணிக்கு வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்டாயம்  தலைமை ஆசிரியர்கள் மட்டும்  கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கூட்டத்திற்கு வரும்போது இவ்வாண்டு தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விவரத்தினை கொண்டுவரும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 11-07-2019 அன்று நடைபெறவுள்ள கூட்டத்திலும் கலந்துக்கொள்ள வில்லை என்றால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள
10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் சார்ந்த சுற்றறிக்கை

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் சார்ந்த சுற்றறிக்கை

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் சார்ந்த முதன்மைக்கல்விஅலுவலர் அவர்களின் சுற்றறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளியில் சுற்றுக்கு அனுப்பிடவும் அதில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
80 சதவிகிதத்திற்கு குறைவாக தேர்ச்சி விழுக்காடு பெற்ற தமிழாசிரியர்கள் விவரம் – அவசரம்

80 சதவிகிதத்திற்கு குறைவாக தேர்ச்சி விழுக்காடு பெற்ற தமிழாசிரியர்கள் விவரம் – அவசரம்

CIRCULARS
அனைத்து அரசு / அரசு நிதி உதவி / உயர் / மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 80 சதவிகிதத்திற்கும் குறைவாக தேர்ச்சி விழுக்காடு பெற்ற தமிழாசிரியர்கள் விவரம் உடன் அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சில பள்ளிகளிலிருந்து விவரம் பெறப்படவில்லை. எனவே, இதுவரை இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைக்காத தலைமையாசிரியர்கள் உடனடியாக நாளை (09.07.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். BELOW 80% (1)
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO ENTER THE +1 & +2 MEDIUMWISE STRENGTH FOR THE YEAR 2019-20 BEFORE 08.07.2019

ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO ENTER THE +1 & +2 MEDIUMWISE STRENGTH FOR THE YEAR 2019-20 BEFORE 08.07.2019

CIRCULARS
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS, ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/ PRINCIPALS ARE INSTRUCTED TO ENTER THE +1 & +2 MEDIUMWISE STRENGTH FOR THE YEAR 2019-20 BEFORE 08.07.2019. மேற்படி மாணவர் எண்ணிக்கை விவரத்தை தவறாமல உள்ளீடு செய்யும்படியும் தவறும் பட்சத்தில் வினாத்தாள் பெறப்படாமைக்கு தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும்எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. CLICK THE LINK BELOW AND ENTER THE DETAILS WITHOUT FAIL   CEO, VELLORE.
EMIS இணையதளத்தின் மூலம் விவரங்கள் பெறுதல் – பள்ளி நேரங்களில் விவரங்கள் அளிக்க பள்ளியை விட்டு வெளியே செல்லுதல் – மின்னஞ்சல் மூலம் விவரங்கள் அனுப்புதல்

EMIS இணையதளத்தின் மூலம் விவரங்கள் பெறுதல் – பள்ளி நேரங்களில் விவரங்கள் அளிக்க பள்ளியை விட்டு வெளியே செல்லுதல் – மின்னஞ்சல் மூலம் விவரங்கள் அனுப்புதல்

CIRCULARS
1) அனைத்து மாவட்டக்கல்விஅலுவலர்கள், 2) அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், 3) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள். EMIS இணையதளத்தின் மூலம் விவரங்கள் பெறுதல் – பள்ளி நேரங்களில் விவரங்கள் அளிக்க பள்ளியை விட்டு வெளியே செல்லுதல் – மின்னஞ்சல் மூலம் விவரங்கள் அனுப்புதல் சார்பாக இயக்குநரின் செயல்முறைகளை (இணைக்கப்பட்டுள்ளது) பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றிடும்படி மாவட்டக்கல்வி அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்/வட்டாரக்கல்வி அலுவலர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DIRECTOR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்  
புதிய பாடத்திட்டம்-புதிய பாடநூல்கள்- மாநில கருத்தாளர்களுக்கான பணிமனை

புதிய பாடத்திட்டம்-புதிய பாடநூல்கள்- மாநில கருத்தாளர்களுக்கான பணிமனை

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், புதிய பாடத்திட்டம்-புதிய பாடநூல்கள்- மாநில கருத்தாளர்களுக்கான பணிமனையில் கலந்துக்கொள்ளும் வகையில்உரிய நேரத்தில் விடுவித்தனுப்பும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE KRP'S LIST CLICK HERE TO DOWNLOAD THE KRP'S LIST-UPERPRIMARY CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF SCERT DIRECTOR CLICK HERE TO DOWNLOAD THE TRAINING VENUE DETAILS CLICK HERE TO DOWNLOAD THE SRG TRAINING AUTHORS LIST முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.  
அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் சார்பான விவரங்கள் கோருதல்

அரசுப்பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் சார்பான விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் நன்கொடையாளர்கள் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்ட (C.S.R) கழிப்பறைகள் சார்பான விவரத்தை  இணைப்பில் CLICK  செய்து உடனடியாக இன்று மாலை 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி  தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE AND ENTER THE DETAILS முதன்மைக்ககல்விஅலுவலர், வேலூர்.
பள்ளிக்கல்வி / தொடக்கக்கல்வி துறைகளில்  பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 08.07.2019 முதல் நடைபெறுவதாக இருந்த பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வுகள் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவடைந்து, தேர்தல் நடத்தை விதிகள் முடிவிற்கு வந்தபின் நடைபெறும் என தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை (ப.,க.5(1) ) துறை அரசாணை (1டி) எண்.244 நாள் 05.07.2019 அன்று வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி தேர்தல் நடத்தை விதிகள் தற்போது  நடைமுறையில் உள்ளதால், பள்ளிக்கல்வி / தொடக்கக்கல்வி துறைகளில்  பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 08.07.2019 முதல் நடைபெறுவதாக இருந்த பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வுகள் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவடைந்து, தேர்தல் நடத்தை விதிகள் முடிவிற்கு வந்தபின் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE G.O.244 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்