இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும்,
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி அவர்கள் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது
இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கோரியுள்ளதால் வேலூர் மாவட்டம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் கருத்துக்களை ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடி தங்கள் பள்ளி சார்பில் மாவட்டத்தின் பெயருடன் கீழ் காணும் Email Id கு இரண்டு நாட்களில் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
EMAIL ADDRESS
casteviolencecommitteechandru@gmail.com
velloreceo@gmail.com
அல்லது கீழ்காணும் முகவரிக்கு தபாலில் அனுப்பவும்:
JUSTISE K CHANDRU
ONE MAN COMMITTEE
147, KUTCHERY ROAD, MYLAPORE, CHENNAI-600004
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்:
1. மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை, தொடக்கக் கல்வி, தனியார் பள்ளிகள்), வேலூ