வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் , மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் 10.03.2026 அன்று காலை 10.00 மணிக்கு பிள்ளையார்குப்பம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் நடைபெறவுள்ளது. எனவே சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் இத்தகவலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
