தேசிய பசுமைபடை இயங்கும் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான சுற்றுச்சூழல் நிதி 12.03.2025 அன்று ஒரு பள்ளிக்கு ரூ.2,500/- வீதம் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலமாக பள்ளி தலைமையாசிரியர்களின் வங்கி கணக்கில் மின்னனு பரிவர்தனை (NEFT) மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தொகைக்கான பயனீட்டு சான்றினை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளரிடன் சமர்பிக்க கோரி இவ்வலுவலக 866/ஆ5/2024, நாள். 17.03.2025 கடிதம் வாயிலாக அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக இணையளதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதுநாள் வரை மேற்காண் தொகைக்கான பயனீட்டு சான்று ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது. எனவே பயனீட்டு சான்றினை ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் 30.05.2025 அன்று மாலை 4.00 மணிக்குள் இவ்லுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்,
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,
அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.
