தமிழ்நாடு அமைச்சுப்பணி – பதிவறை எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர்/ ஆய்வக உதவியாளர் ஆக பணிமாற்றம் மூலம் நியமனம் – பதவி உயர்வு தேர்ந்தோர் பட்டியல் மற்றும் கலந்தாய்வு – நடைபெறுதல் – சார்ந்து

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி/மாவட்டக்கல்வி அலுவலகம் (இடைநிலை, தொடக்கக்கல்வி, தனியார் பள்ளி) வட்டாரக் கல்வி அலுவலகங்கள்

வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலகம் (இடைநிலை , தொடக்கக்கல்வி) களில் பணிபுரியும் பதிவறை எழுத்தர்களுக்கு 15.03.2023 நிலவரப்படி இளநிலை உதவியாளர்/ஆய்வக உதவியாளர் ஆக பதவி உயர்வு அளிக்க தேர்ந்தோர் பட்டியல் வெளியிட்டு, சரிபார்த்து அதன் படி 30.11.2023 அன்று கலந்தாய்வு நடத்த உள்ளதால் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் உள்ள பதிவறை எழுத்தர்களை காலை 10.00 மணி அளவில் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தேர்ந்தோர் பட்டியலை சரிபார்க்கவும் மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் விதத்தில் பணியாளர்களை விடுவித்து அனுப்ப சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்.