அனைத்து அரசு / நகராட்சி / நிதி உதவி / பகுதி நிதி உதவி / ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது. தேவை இருப்பின் நிரவல் செய்து வழங்கப்படும். இருப்பு இருப்பின் தெரிவிக்க வேண்டும். எனவே இதுவே இறுதி வாய்ப்பு. அடுத்த வருடம் இருப்பு வைக்க வேண்டாம். எனவே சரியான விவரத்தினை தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டு இன்று 11.08.2021 மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறும், தேவை / இருப்பு – இல்லை எனினும் “இன்மை” அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.