அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் சார்பாக பணிமூப்பின் அடிப்படையில் 01.01.2020 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து தலைமைஆசிரியர்கள் அனுப்பக்கோருதல் சார்பாக இணைப்பில்உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இன்று 10.09.2020 காலை 11.00க்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் சமர்ப்பிக்குமாறு அரசு/நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதவி உயர்விற்கு தகுதியான ஆசிரியர்கள் எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை தவறாமல் சமர்ப்பிக்குமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியலில் ஆசிரியர்கள் பெயர் விடுபட்டிருப்பின் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர் முழுப் பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது