2023-2024ஆம் கல்வியாண்டு – 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் –  கால அட்டவணை வெளியிடுதல் – சார்ந்து

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான 2023 -2024ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் 02.04.2024 அன்று தொடங்கி 12.04.2024 வரை நடைபெறும் எனவும் 13.04.2024 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் ஆசிரியர்கள் 19.04.2024 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள்,

அரசு/ அரசு உதவிபெறும்/தனியார் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.