Month: August 2022

நூலகம் சார்ந்து கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்  மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குதல்  – சார்ந்து.

CIRCULARS
அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் நூலகம் சார்ந்து கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்  மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் சார்ந்து இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி போட்டிகள் நடத்தி மாணாக்கர்கள் பயனடைய செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். Library-B3Download

மிக மிக அவசரம் – சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் –  அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டு 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு (சுயநிதி பிரிவு நீங்கலாக) பயின்ற மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்பட்டது – ஒரு சில மாணவர்களுக்கு வங்கி கணக்கு விவரம் பதிவேற்றம் செய்யப்படாதது – விடுபட்ட மாணவர்களுக்கு வங்கி கணக்கு விவரம் பதிவேற்றம் செய்யக் கோருதல் – சார்பு

CIRCULARS
சார்ந்த  அரசு / அரசு உதவிபெறும் உயர் நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டு 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு  (சுயநிதி பிரிவு நீங்கலாக) பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 18.08.2022க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் ஒரு சில மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது எனத் தெரியவருகிறது. எனவே, சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விடுபட்ட மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை நாளை (25.08.2022) மாலை 5.00 மணிக்குள் பதிவேற்றம் செய்யமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தவறும்பட்ச

பள்ளிக்கல்வி – 2022-23ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேட்டின்படி மாணவர்களின் விவரங்களை (மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் / பாதுகாவலர் பெயர், ஆதார் எண், கைப்பேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்கள்) EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல்

அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – 2022-23ஆம் கல்வியாண்டில் அனைத்து வகைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேட்டின்படி மாணவர்களின் விவரங்களை (மாணவர் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் / பாதுகாவலர் பெயர், ஆதார் எண், கைப்பேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்கள்) EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் EMIS Portal-ல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை இறுதியாக உரிய ஆவணங்களுடன் சரிபார்த்தல் சார்பாக தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நிதியுதவி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் EMIS Portal-ல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணைப்பில் உள்ள பள்ளிகள் மற்றும் மாணவர்கள் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து  உரிய  ஆவணங்களுடன் சரிபார்க்கும்படி அனைத்து அரசு/ நிதியுதவி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். MRA_SCHL-LISTDownload MRA_Verification_Status_2208_1430Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பள்ளிக்கல்வி – பள்ளிப் பதிவேடுகளில் மாணவ / மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னெழுத்தையும் தமிழில் இடுவதற்கு உரிய அரசாணை பெற்றமை – சுற்றறிக்கை அனுப்புதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, பள்ளிக்கல்வி – பள்ளிப் பதிவேடுகளில் மாணவ / மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெயருக்கு முன்பு இடப்படும் முன்னெழுத்தையும் தமிழில் இடுவதற்கு உரிய அரசாணை பெற்றமை – சுற்றறிக்கை அனுப்புதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ProceedingsDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் EMIS Portal-ல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மீள உரிய ஆவணங்களுடன் சரிபார்த்தல் சார்பாக தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நிதியுதவி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் EMIS Portal-ல் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மீள உரிய ஆவணங்களுடன் சரிபார்த்தல் சார்பாக தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நிதியுதவி நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -MRADownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

”பள்ளித் தூய்மை பிரச்சாரம்” – வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தூய்மையை மேற்கொண்டு அறிக்கை அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, ”பள்ளித் தூய்மை பிரச்சாரம்” - வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தூய்மையை மேற்கொண்டு அறிக்கை அனுப்ப கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். School-Campus-cleaningDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி – தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் – 50 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடை பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி - தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் - 50 அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடை பயிற்சியில் கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். STEM-Training-50-Science-Graduate-Teachers-Phase-IIDownload Vellore-District-List-of-Teachers-for-TNSCST-TrainingDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – மாதிரி பள்ளி – தெரிவு செய்யப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான கூட்டம் – மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்ள சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - மாதிரி பள்ளி - தெரிவு செய்யப்பட்ட மாணவர் மற்றும் பெற்றோர்களுக்கான கூட்டம் - மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்ள சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Model-School-Student-Name-list0000001ADownload Model-School-English-Tamil-Medium-Students-ListDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 2022 – 11ம் வகுப்பு அனைத்து பள்ளிகள் மாணவர்கள் விண்ணப்பிக்க தெரிவித்தல் சார்பு

அனைத்து வகை அரசு / நிதியுதவி மற்றும் அங்கீகாரம் பெற்ற (CBSE - ICSE உட்பட) பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் கவனத்திற்கு அனைத்து வகை அரசு / நிதியுதவி மற்றும் அங்கீகாரம் பெற்ற (CBSE - ICSE உட்பட) பள்ளியில் பயிலும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு 01 - 10- 2022ம் தேதி அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகையில் மூலம் தெரிவிக்கவும் , அக்கடிதம் தங்கள் தொடர் நடவடிக்கைக்காகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறும் அனைத்து வகை அரசு / நிதியுதவி மற்றும் அங்கீகாரம் பெற்ற (CBSE - ICSE உட்பட) பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு