அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்ட இதர ஆவணங்கள் மாணவர்களின் பெயர் பட்டியல், மாணவர்களின் வருகைப் பதிவேடுகள் உட்பட தேர்வுகள் முடிவுற்ற மறுநாள் வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
நகல்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
TO THE CONCERN HEADMASTERS
DOWNLOAD THE ATTACHMENT AND FOLLOW THE INSTRUCTIONS.
CEO VELLORE.
2084 B4 - Residential NEET Training
NEET Selected Students List
அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான உழைப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சில்லரைச் செலவினம் முன்பணத் தொகையினை வேலுர் மாவட்டம், கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 21-03-2019 அன்று பெற்றுக்கொள்ளுமாறு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களின் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது கடிதத்தில் தெரிவித்துள்ள விவரங்கள் படி செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
+2,+1 THEORY
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள
அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சியில் இடம்பெறும் வகையில் “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2019” என்ற தலைப்பில் தங்கள் பள்ளி சார்பாக ஓவியம் வரைந்து 18.03.2019 (திங்கள்) மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்கத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பெறும்பாலான பள்ளிகள் ஒப்படைக்காமல் உள்ளனர். எனவே, ஒப்படைக்காத பள்ளிகள் உடனடியாக இன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘சி3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்துவகை தொடக்க/நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஓவியம் முழு Chart அளவில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து மேல்நிலை தனித்தேர்வர்கள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளின்படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை தனித்தேர்வர்கள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
+2 PRIVATE CENTRES(2)
005647 PRACTICAL EXAM INSTRUCTIONS(3)
PRACTICAL BLANK MARK SHEET FOR PRIVATE CANDIDATE(2)
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை தனித்தேர்வர்கள் மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்
நகல்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
செய்முறை பயிற்சி ஏட்டிற்கான கட்டணம் இதுவரை செலுத்தாத தலைமையாசிரியர்கள் உடன் கீழ்கண்ட வங்கிக்கணக்கில் செலுத்திவிட்டு செலுத்துச்சீட்டினை 9385202243 என்ற Whatsapp-ல் மறுநினைவூட்டிற்கு இடமின்றி அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வங்கியின் பெயர் : INDIAN BANK, VELLORE COLLECTORATE BRANCH
கணக்கு எண் : 6563462406
“Secretary Higher Secondary Practical” என்ற பெயரில் எடுக்கப்பட வேண்டும்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து வகை மேல்நிலைப் பொதுத்தேர்வு மையம் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு,
மார்ச் 2019 மேல்நிலைப்பொதுத்தேர்வு மையங்களில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு உண்டான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பற்றொப்ப இரசீதுகளை தயார் செய்து வேலூர், காட்பாடி, கல்புதூர், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் தேர்வுகள் முடிவுற்ற மறு நாள் ஒப்படைக்கப்பட வேண்டும் என முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
(மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு மையத்திற்கு தனியாகவும், மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு மையத்திற்கு தனியாகவும் தயார் செய்து இரு நகல்களில் ஒப்படைக்கப்பட வேண்டும்)
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.