அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
01.01.2021 மற்றும் 01.01.2022 அன்றைய நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-2 பதவி உயர்வு வழங்க உத்தேச தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல், பதவி உயர்வு வழங்குவதற்கான நபர்களின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து வெளியிடப்படுகிறது. தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்களின் பெயர் சேர்க்கை/ நீக்கல்/ திருத்தம் ஏதேனும் இருப்பின் உரிய ஆவணங்களுடன் தகுதிவாய்ந்தோர் சார்பான விவரங்களை நாளை (13.01.2022) மாலை 3.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. தகுதி வாய்ந்தோர் எவரது பெயரும் விடுபட்டிருப்பின் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் எனவும், எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கலாகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.