வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டம் – அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு வழங்கப்பட்ட BSNL CUG க்கு கட்டணம் செலுத்த கோருதல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

வேலுர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்மெட்ரிக் பள்ளிமுதல்வர்களுக்கு கல்வித்துறை சார்பான செய்திகள் அனுப்பவும், உடனுக்குடன் தகவல்கள் பெறும் பொருட்டு 2018ஆண்டு BSNL CUG  SIM வழங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இவ்வாண்டிற்குண்டான வருடாந்திர கட்டணம் ரூ.1400/-ஐ சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலத்தில் 06-08-2020 அன்று மாலை 04.00 மணிக்குள் செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் தற்போது வருடாந்திர கட்டணம் செலுத்தாத சூழ்நிலையினால் தற்காலிகமாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக BSNL நிறுவனத்திலிருந்து தகவல் பெறப்பட்டுள்ளது. தாங்கள் செலுத்தும் வருடாந்திர கட்டணத்திற்கு உரிய இரசீது BSNL  நிறுவனத்திலிருந்து பெற்று தங்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உரிய கட்டணம் செலுத்தி புதுபித்தபின் கீழ்க்காணும் வசதிகள் இந்த இணைப்பு  மூலம் பெற்று பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

1. BSNL CUG இணைப்பில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களிடமும் எவ்வித கட்டணமும் இன்றி ஒருவருடத்திற்கு  அழைப்புகள் மூலம் அலைபேசியினை பயன்படுத்திக்கொள்ளலாம்.

2. நாள் ஒன்றுக்கு  1 GB  இணையதளவசதி வழங்கப்பட்டுள்ளது. (சென்ற ஆண்டு மாதத்திற்கு 1 GB வழங்கப்பட்டுள்ளதை தற்போது மாற்றம் செய்து பெறப்பட்டுள்ளது.)

3. நாள் ஒன்றுக்கு 100 குறுஞ்செய்தி எவ்வித கட்டணமும்மின்றி அனுப்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்விஅலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

முதன்மைக் கல்வி அலுவலர்

திருப்பத்தூர் / இராணிப்பேட்டை அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள்

வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.

(தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளிலிருந்து BSNL CUG வருடாந்திர கட்டணத்தினை பெற்று 07-08-2020 அன்று காலை 10.00 மணிக்கு வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் B4 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.