பள்ளிக் கல்வி – மெட்ரிக் / மழலையர் பள்ளிகள் – இலவசக் கட்டாயக் கல்வி – குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம் – 2009 – 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு மாணவனுக்கான செலவு ( Per Child Cost) அரசாணை தொடர்பாக.

மேற்காண் அரசாணையினை தறவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு குழு அலுவலர்கள் வரும் பொழுது தங்கள் பள்ளிக்கான தனியார் பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்த ஆணை மற்றும் மேற்காண் (Per Child Cost ) ஆகியவற்றை ஒப்பிட்டு எது குறைவாக உள்ளதோ அத்தொகையினை குழுவிற்கு சமர்பிக்கப்படும் ஈட்டளிப்பு தொகை படிவத்தில் பதியப்பட வேண்டும் என அனைத்து மெட்ரிக் / மழலையர் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

// ஒப்பம் //

// க.முனுசாமி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

முதல்வர்கள் / தாளாளர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி / மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.