வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது. போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அனைத்து விவரங்களும் கீழ்காணும் இணைப்பில் வழங்கப்பட்டுள்ளன. எனவே போட்டித் தேர்வுகளுக்கான தகவல்களை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக 12ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அறியச் செய்யுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
