முகாம் நடைபெறும் நாள்-13.01.2026-முகாம் நடைபெறும் இடம் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய பொறுப்பு அலுவலர்களின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
- முகாம் நடைபெறவிருக்கும் பள்ளியின் தலைமையாசிரியர்கள் முகாமிற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- ஆவணத் தயார்நிலை:
முகாம் நடைபெறும் நாளில், வங்கி கணக்கு துவங்கிட மாணாக்கர்களின் ஆதார்அட்டை மற்றும் ஆதார்அட்டையுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் கொண்ட கைபேசி போன்றவை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தேவையான ஆவணங்களைக் கொண்டு வருவதை உறுதி செய்யவும்.
- இந்தியன் போஸ்ட் பேமெண்ட் வங்கி (IPPB) கணக்கு:
- 10வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு:
10 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இந்தியன் போஸ்ட் பேமெண்ட் வங்கிக் கணக்கு துவங்க, விண்ணப்பப் படிவத்தில் மாணவர் மற்றும் பெற்றோரின் விவரங்களை பூர்த்தி செய்து, படிவங்களை கீழ்காணும் ஆவணங்களுடன் அஞ்சல் துறையினரிடம் சமர்பித்தல் வேண்டும்.
- மாணவரின் ஆதார் அட்டை-நகல்.
- பெற்றோரின் ஆதார் மற்றும் PAN அட்டை-நகல்.
- மாணவரின் புகைப்படம்-2. (Passport size)
- 10வயதிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு
10 வயதிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு இந்தியன் போஸ்ட் பேமெண்ட் வங்கிக் கணக்கு துவங்க,மாணவர்களின் ஆதார் அட்டையுடன் இணைப்பட்டுள்ள இணைக்கப்பட்ட அலைபேசி எண் கொண்ட கைபேசி மற்றும் மாணவரின் ஆதார் அட்டை நகல் கொண்டு வருவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.
- வங்கிக் கணக்கு துவங்கப்படவேண்டிய மாணவர்கள்:
அஞ்சலக அதிகாரிகளின் பட்டியலின்படி அனைத்து மாணவர்களும் வேறு ஏதேனும் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், இந்தியன் போஸ்ட் பேமெண்ட் வங்கி (IPPB) கணக்கைத் திறக்க வேண்டும்.
- களஒருங்கிணைப்பு:
தேவைப்படும் இடங்களில் இந்தியா போஸ்ட்குழு, மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இடையேயான தொடர்புகளை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதி செய்தல்வேண்டும்.
- eKyc Verification:
மாணவர்களுக்கான eKyc Verification பணியானது பள்ளி அளவிலேயே நிறைவு செய்ய வேணடியது. மேலும் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு eKyc Verification மேற்கொள்ள TN Generic செயலி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இந்தியன் போஸ்ட் பேமெண்ட் வங்கி (IPPB) கணக்குகள் துவங்கப்பட்ட விவரங்களை மாணவர்களின் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்பணியை முக்கிய பணியாக கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட்டு தங்கள் பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு உரிய நேரத்தில் கல்வி உதவித்தொகை மற்றும் பெண்கல்வி ஊக்கத்தொகை பெற வழிவகை செய்யுமாறு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் பெயர் பட்டியல்
/ஒப்பம்/
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
