குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2021-22ம் கல்வியாண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தல் – கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்தல்

சார்ந்த தலைமையாசிரியர்கள்/ பொறுப்பு தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு,

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2021-22ம் கல்வியாண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தல் – கண்காணிப்பு அலுவலர்களாக இணைப்பில் உள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள தலைமையாசிரியர்கள்/ பொறுப்பு தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுநர்களை நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது.

எனவே, பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள்/ அலுவலர்கள் குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு 18.08.2021 மற்றும் 19.08.2021 ஆகிய நாட்களில் தங்கள் பெயர்/ பதவி கலத்திற்கு எதிரே குறிப்பிட்டுள்ள பள்ளிகளுக்கு கண்காணிப்பு பணி மேற்கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர்(கூ.பொ), வேலூர்

பெறுநர்

சார்ந்த தலைமையாசிரியர்கள்/ பொறுப்பு தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுநர்கள்

நகல்

வேலூர் மாவட்டக்கல்வி அலுவலருக்கு தகவலுக்காக மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனுப்பலாகிறது.