சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இணைப்பில் காணும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி (பயிற்றுநர்/ஆசிரியர்கள்) வருகின்ற திங்கட்கிழமை (10.11.2025) அன்று பிற்பகல் 02.00 மணியளவில் தேர்வுகள் சார்பான ஆயத்தக் கூட்டம் வேலூர், காட்பாடி, SSA(ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி), கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள், முதுகலைஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை -விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
//ஓம்.//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை /தனியார் பள்ளிகள் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
