அனைத்து அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு/நகரவை/உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள்/இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றோர் மற்றும் நாளது தேதி வரை தேர்வு எழுதாத ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள Linkஐ பயன்படுத்தி உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி / உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு விவரங்கள் உடனடியாக தொகுத்தனுப்ப ஏதுவாக இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
https://docs.google.com/spreadsheets/d/1X4UOpotneAh1LUScz_SORth1BP-opzmdNae7xsGRBqk/edit?usp=sharing
மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து தலைமையாசிரியரின் கையொப்பத்துடன் 08.09.2025அன்று மாலை 03.00மணிக்குள் இவ்வலுவலகத்தில் சார்ந்த பிரிவுகளில் சமர்ப்பிக்குமாறும் அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
//ஓம்.சு.தயாளன்//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை )தொடர்நடவடிக்கையின் பொருட்டு
