K100 வினாடி வினா போட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலைஞர் 100 வினாடி-வினா போட்டி முதல் கட்டமாக இணையதளம் வழியாக நடைபெற உள்ளது

வினாடி-வினா போட்டி தொடங்கி அடுத்த 60 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

kalaignar100.co.in

என்ற இணையதளம் வாயிலாக போட்டிகள் நடைபெற உள்ளன.

தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை Registration செய்து போட்டிகளில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

முக்கிய தகவல்கள்
1) போட்டிக்கு மூன்று மாணவர்கள் ஒரு குழுவாக பதிவு செய்ய வேண்டும்

2) பதிவு செய்யும் அனைவரின் அலைபேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்

3) ஒரு பள்ளி எத்தனை குழுக்கள் வேண்டுமானாலும் பதிவு செய்ய இயலும்

4) ஆசிரியர்களும் மூவர் குழுவாக கலந்து கொள்ள இயலும்

வேலூர் மாவட்டம் சார்பில் வினாடி வினா போட்டிகளில் ஆசிரியர்கள்/மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வெல்ல வாழ்த்துக்கள்

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர் ,

அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்/ தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.