EXAM

அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு விடைத்தாட்கள் பெறப்படாத பள்ளிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 21 .02. 2022 அன்று காலை 9.30 மணியிலிருந்து 12.00 மணிக்குள் தனி நபர் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தல்

CIRCULARS, EXAM
அனைத்து வகை உயர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, நடைபெற்று முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பொருட்டு விடைத்தாட்கள் பெறப்படாத பள்ளிகள் ஸ்ரீவெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 21 .2 . 2022 அன்று காலை 9.30 மணியிலிருந்து 12 மணிக்குள் முகப்புக்கடிதத்துடன், தனி நபர் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து வகை உயர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மதிப்பெண்களை பட்டிலிட்டு 25.02.2022 அன்று மாலை 3.00 மணிக்குள் மதிப்பெண் பட்டியல்களை இரு நகல்களில் தனித்தனித்தனியாக சீலிடப்பட்ட உறையிலிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மதிப்பெண் பெறும் குழுவிடம் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுக

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கூடுதல் விடைக்குறிப்புகள் (17.02.2022)

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இதுவரை நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்புகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மதிப்பீட்டு பணியினை உடன் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு இரண்டாம் கட்ட விடைத்தாட்களை 16-02-2022 அன்று காலை 09.00 மணி முதல் வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியிலிருந்து முகப்புக் கடிதத்துடன் தனி நபரினை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. 10th-Tamil-vellore-Download 10-Maths-TM-key-vellore-Download 10-Maths-EM-Key-vellore-Download 12-tamil-velloreDownload 12-Chemistry-TM-velloreDownload 1

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 17.02.2022 அன்று தேர்வு எழுதும் மாணவர் வருகைப்பதிவு விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

CIRCULARS, EXAM
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 17.02.2022 அன்று தேர்வு எழுதும் மாணவர் வருகைப் பதிவு விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலை நடைபெறும் தேர்விற்கு 10.00க்கு முன்பு வருகைப் பதிவினை உள்ளீடு செய்யவும், பிற்பகல் நடைபெறும் தேர்வுற்கு வருகைப் பதிவினை பிற்பகல் 2.30 மணிக்குள்ளாகவும் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12ம் வகுப்பிற்கு விவரங்களை உள்ளீடு செய்யும்போது, Total No. of 12th Std Students (boys, Girls,Total) என்ற கலங்களில் 17.02.2022 அன்று தேர்வு நடைபெறும் பாடத்தின் மொத்த மாணவர்கள் விவரத்தை உள்ளீடு செய்ய

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கூடுதல் அறிவுரைகள்வழங்குதல் (திருத்தப்பட்டது)

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் additional-inst.-for-first-revison-exam-1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வு தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக 10-02-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வு 17-02-2022 அன்று மாற்றம் செய்யப்பட்டது சார்பாக

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணையில் 10-02-2022 அன்று நடைபெறவுள்ள தேர்வு 17-02-2022 அன்று நடைபெறும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு REvision-Test-1-English-exam-date-change1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2022 – பிற மொழிப் பாடம் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வினாத்தாட்கள் பெறுவது சார்பான தகவல்

அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு தொடர்பாக பிற மொழிப்பாட வினாத்தாட்கள் (உருது, இந்தி, பிரென்ச் அரபிக்) வேலூர் மாவட்டம். வேலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அலைபேசி எண் கீழ்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. பிறமொழிப்பாடம் வினாத்தாட்கள் பெறுவது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் விவரம் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திரு. நெப்போலியன், தலைமை ஆசிரியர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி வேலூர் ( அலைபேசி எண் 9443272868 ) முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிட்க பள்ளி முதல்வர்கள்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 – தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் சரிபார்க்க கோருதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு 2022 தொடர்பாக தேர்வு மையம் மற்றும் இணைப்பு பள்ளிகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. தேர்வு மையத்திற்குண்டான இணைப்பு பள்ளிகள் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுமாறு தேர்வு மைய மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இணைப்பு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திரு. ப. தசரதன், உதவியாளர், 8825819484 திரு. ச. சுரேந்தர் பாபு உதவியாளர் 9442273554 இணைப்பு VelloreDownload முதன்மைக் கல்விஅலுவலர் வேலூர் பெறுநர்

ஊரகப் பகுதி மாணவர்களுக்கான திறானாய்வுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (மெட்ரிக் பள்ளிகள் தவிர) ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுசார்பாக சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்ட கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு TRUST-EXAM-DATE-EXTENDED-INSTRUCTIONDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து ஊரகப் பகுதி அரசு / நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காக

10 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கனா முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வு தொடர்பான தேர்வுக்கால அட்டவணை மற்றும் பாடத்திட்டம் அனுப்புதல் சார்பு

அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தின்படி செயல்படுமாறு அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிமுதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 3866-Revision-Test-2021-22Download SSLC-AND-HSE-2ND-YEAR-REVISION-TEST-1-2021-22Download SSLC-AND-HSE-2ND-YEAR-REVISION-TEST-II-2021-22Download Click here to download first revision test syllabus Click here to download second revision test syllabus முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் நகல் அனைத்து உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு இரண்டாம் அலகுத் தேர்வு வினாத்தாட்கள் வழங்குதல் மற்றும் பாடத் திட்டம் சார்பு (திருத்தம் செய்யப்பட்டது)

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்குண்டான இரண்டாம் அலகுத் தேர்வு நவம்பர் மற்றும் டிசம்பர் 2021பாடத்திட்டம்படி நடைபெறும். இணைப்பில் காணும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியாகள் தேர்வுகள் நடைபெறும் நாள் அன்று வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வினாத்தாட்கள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு 23.12.21-CUSTODIAN-POINT-VELLORE-DIS1Download முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு