CIRCULARS

உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டிற்காக மற்றும் 31.05.2018ல் ஓய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்/ தையல்/ இசை/ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் மற்றும் தமிழ் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டிற்காக மற்றும் 31.05.2018ல் ஓவ்வு பெறுவதால் ஏற்படக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்/ தையல்/ இசை/ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் மற்றும் தமிழ் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் இணைப்பில் கண்ட படிவங்களில்  பூர்த்தி செய்து  velloreceo@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு , 12.02.2018க்குள் ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்- பணிவரன்முறை கருத்துருக்கள் கோருதல்

CIRCULARS
  அனைத்து அரசு/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள்,   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்- பணிவரன்முறை கருத்துருக்களை இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி  12.02.2018க்குள் நேரடியாக ஒப்படைக்கும்படி  தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  

பிப்ரவரி 2018 மாதத்திற்கான ஆசிரியர் குறைதீர்வு நாள் மற்றும் இதர குறைகள் சார்ந்து வரும் 10.02.2018 சனிக்கிழமை 9.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பிப்ரவரி 2018 மாதத்திற்கான ஆசிரியர் குறைதீர்வு நாள் (தேர்வுநிலை/ சிறப்புநிலை/ பணிவரன்முறை/ தகுதிகாண்பருவம்) மற்றும் இதர குறைகள் சார்ந்து வரும் 10.02.2018 சனிக்கிழமை 9.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும். மேற்படி குறை தீர்வு நாளில் சார்ந்த  ஆசிரியர் கலந்துகொள்ளுமாறும் மேற்காணும் இனங்களில் அனைத்து கல்வி சான்றுகள் உண்மை தன்மை பெற்று முறையாக பதிவு செய்து தகுதியாக உள்ளவர் சார்ந்து கருத்துருக்கள் மட்டுமே அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் முழுமைபெறாத கருத்துருக்களை அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

+2 செய்முறைத்தேர்வு மதிபெண் பட்டியல் மற்றும் செலவின பற்றுச்சீட்டுகளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,   +2 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் செலவின பற்றுச்சீட்டுகளை  காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாமசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2017-18ம் கல்வி ஆண்டில் ஓய்வு பெறவுள்ளவர்கள் சார்ந்து பொது வைப்புநிதி இறுதி தொகை கோரும் விண்ணப்பங்கள் அனுப்பாதவர்கள் அனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது

CIRCULARS
பெறுநர் அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், 2017-18ம் கல்வி ஆண்டில் ஓய்வு பெறவுள்ளவர்கள் சார்ந்து பொது வைப்புநிதி இறுதி தொகை கோரும் விண்ணப்பங்கள் அனுப்பாதவர்கள் அனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLAOD THE A2 PROCEEDINGS & LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

07.02.2018 அன்று காலை 9.00 மணி அளவில் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி-Vellore Edn.Dt.-Collectorate GDP Hall, Tirupattur Edn Dt.-SSA MEETING HALL – நடைபெறவுள்ளது

CIRCULARS
07.02.2018 அன்று காலை 9.00 மணி அளவில் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி கீழ் உள்ளபடி நடைபெறுவதால் சார்ந்த ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. வேலூர் கல்வி மாவட்டம் - வேலூர், மாவட்ட ஆட்சியர் வளாகம் (GDP Hall) திருப்பத்தூர் கல்வி மாவட்டம் - காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)  கூட்ட அரங்கு   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

RMSA – வேலூர் மாவட்டம்-கேளோ இந்தியா திட்டம் (Khelo India Scheme) – தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்.

CIRCULARS
TO ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS, RMSA – வேலூர் மாவட்டம்-கேளோ இந்தியா திட்டம் (Khelo India Scheme) - தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   Click here to downlaod the procedding for Khelo India Scheme-06.02.2018 CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  

07.02.2018 அன்று 10.00 மணி முதல் 12.00 மணிவரை கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் மார்ச் 2018-இரண்டாம் ஆண்டு தேர்விற்கான இதர பாடங்களுக்கான (Other Subjects) முகப்புத் தாட்கள் பிரித்து அளித்தல்

CIRCULARS
அனைத்து தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள், மார்ச் 2018-இரண்டாம் ஆண்டு தேர்விற்கான இதர பாடங்களுக்கான (Other Subjects)  முகப்புத் தாட்கள் நாளை (07.02.2018) காலை 10.00 முதல் நன்பகல் 12.00 மணி வரை  கொணவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படவுள்ளது. தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் பெற்றுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE - HSC - +2 TOP SHEETS (Other Subjects) - FORMAT முடுதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

06.02.2018 முதல் 18.02.2018 முடிய VITயில் நடைபெறும் RIVERA’18- விளையாட்டுப்போட்டிகளில் நடுநர்வர்களாக கலந்துகொள்ள உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்தல்

CIRCULARS
  சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், VIT ல்  06.02.2018 முதல் 18.02.2018 முடிய நடைபெறும் RIVERA’18- விளையாட்டுப்போட்டிகளில் நடுநர்வர்களாக கலந்துகொள்ள ஏதுவாக உடற்கல்வி ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE LIST முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.