அனைத்து அரசு/நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு,
வேலூர் மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்ட நிலையில் நாளை (20.06.2018) நடைபெற இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இல்லை.
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.
அனைத்து அரசு/நகரவை உயர்/ மேநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை. ஆசிரியருடன் கூடிய உபரி பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்பட்டியலின்படி
நாளை (19.06.2018) காலை 9.00 மணிக்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேவரா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பணிநிரவல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்வகையில் உடனடியாக பணியிலிருந்து
விடுவித்தனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE COVERING LETTER
CLICK HERE TO DOWNLOAD THE BT DEPLOYMENT LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
31.05.2018 அன்று செயலர், சி.பி.எஸ்.இ. , புதுடெல்லி அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கைஅனைத்து பள்ளிகளின் கவனத்திற்கும் அனுப்பப்படுகிறது
எனவே, சி.பி.எஸ்.இ. போர்டில் இணைப்பு பெற்றுள்ள (Affiliation) அனைத்து பள்ளிகளும் RTE சட்டத்தின்படி மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அங்கீகார ஆணையினை பெற்று செயல்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ. / ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் தமிழக அரசிடமிருந்து தடையின்மை சான்று (NOC) பெற்று பள்ளி செயல்பட்டு வந்தாலும், மாநில அரசின் அங்கீகார ஆணை (Recognition order) நாளது தேதிவரை பெறாத பள்ளிகள் அங்கீகார ஆணை பெறுவதற்கான கருத்துருக்களை உரிய சான்றுகளுடன் மறு நினைவூட்டலுக்கு இடமளிக்காமல் உடனடியாக வேலூர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE Affilaiti
அனைத்து தனியார் மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ./நிதியுதவி/சுயநிதி பள்ளி முதல்வர்கள் / தாளார்கள் கவனத்திற்கு,
14.06.2018 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள G.O.Ms.No.76, Dated:14.06.2018 அரசாணையினை நிறைவு செய்யும்வகையில் தங்கள் பள்ளி கட்டிடங்கள் 01.01.2011-க்கு முன்னர் DTPC (உள்ளூர் திட்டக்குழுமும்) அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு 3 மாதங்களுக்குள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்றி கட்டிட அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கட்டிட அனுமதி பெற்ற நகலினை முதன்மைக்கல்வி அலுவலகம்/ மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 3 மாதங்களுக்குள் சார்ந்த பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்கள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
G.O.ms.No.76,Housing dept, dt.14.06.2018
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் மூலம் அளிக்கப்பட்டுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 2018-19 பொதுத்தேர்வு வினாத்தாள் குறித்த தெளிவுரை வழங்குதல் சார்பான சுற்றறிக்கை அனைத்துப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது.
சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜுன் மாதம் முதற்கொண்டே உரிய பயிற்சிகள் வழங்க அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குறித்தான மாணவர்களிடையே உள்ள அச்சம்தெளிவுபடுத்தப்படவேண்டும்.
அனைத்து தலைமையசிரியர்களும் சுற்றறிக்கையின் நகலை அ னைத்து பாட ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட அறிக்கையை முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE HS