அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் , கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்கள் கவனத்திற்கு
மேல்நிலை பொதுத் தேர்வு தொடர்பான இயக்குநர் அவர்களின் தலைமையில் ஆயத்தக்கூட்டம் இணைப்பில் காணும் செயல்முறை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உரியவர்கள் தவறாமல் ஆயத்தக்கூட்டத்திற்கு தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுத் தேர்வுகள் சார்பான கையேட்டுடன் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
EXAM-MEETING
SQURD LIST 25.02.2020
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், தொடர்பு அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் , முதன்மைக் கண்காணிப்பாளர்கள
அனைத்து தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு
2019-2020ஆம் கல்வியாண்டில் 3 முதல் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குதல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளைப் பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE BANK ACCOUNT DETAIL FORMAT
CLICK HERE TO DOWNLOAD THE POST OFFICE ACCOUNT DETAIL FORMAT
சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம் – 2019-20 தற்போது 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்காக பெற்று வைக்கப்பட்டுள்ள விலையில்லா மிதிவண்டிகளை மாணவ/மாணவிகளுக்கு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்படும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.
நினைவூட்டு மிக அவசரம் தேர்வுமைய தொலைபேசி எண் உள்ளீடு செய்யப்படாத பள்ளிகள் உடன் உள்ளீடு செய்ய கோருதல் தேர்வுகள் தனிகவனம்
தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு பொதுத்தேர்வு மையங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் தொலைபேசி (Land line) விவரங்களை வேலூர், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக 24.02.2020 (இன்று) நன்பகல் 01.30 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து பொதுத்தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.
மிக மிக அவசரம்- தேர்வுகள் மேல்நிலை முதலாமாண்டு/இரண்டாமாண்டு பொதுத்தேர்வு, மார்ச்-2020 -தனித்தேர்வர்கள்-தேர்வு மையங்களில் செய்முறைத் தேர்வு நடத்துதல் தொடர்பான கீழ்க்காணும் சென்னை -6 அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகளை பின்பற்றி எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS AND FORM
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து மேல்நிலை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்/ பள்ளித் தலைமைஆசிரியர்கள்/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.
நகல்
முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர்/இராணிப்பேட்டை.
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்
நடவடிக்கைக் காகவும் அனுப்பலாகி
சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்கள் வங்கி சேமிப்பு கணக்கு துவங்கப்பட்ட எண்ணிக்கை விவரத்தினை ஒப்படைக்காத பள்ளிகளின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை click செய்து மாணவர் எண்ணிக்கை விவரத்தினை உள்ளீடு செய்யுமாறும், படிவத்தினை பூர்த்தி செய்து 24.02.2020 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக இ3 பிரிவில் ஒப்படைக்குமாறும் இணைப்பிலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம்
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
CLICK HERE TO ENTER THE DETAILS
CLICK HERE TO DOWN
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2019-20ஆம் கல்வியாண்டு அனைத்துபட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான Post NAS இரண்டு நாள் பயிற்சி வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சார்ந்த ஆசிரியர்களை உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்துகொள்ளத்தக்கவகையில் விடுவித்தனுப்பும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE RPs LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.