22.02.2021 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் சாரணியர் இயக்ககத்தில் வேலூர், அரசு (முஸ்லிம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள பாரத சாரண ”சிந்தனை நாள் பேரணியில்” அனைத்து சாரண ஆசிரியர்கள் மற்றும் மாணவர்/மாணவியர் சீருடையில் கலந்துகொள்ள தெரிவித்தல்
அனைத்து வகைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு,
வரும் 22.02.2021 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் பாரத சாரண சாரணியர் இயக்ககத்தில் ”சிந்தனை நாள் பேரணி” வேலூர், அரசு (முஸ்லிம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளதால் வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் உள்ள சாரண ஆசிரியர்கள் மற்றும் சாரண சாரணிய மாணவர்கள் உரிய சீருடையில் சரியான நேரத்திற்கு முன்னதாக வருகை தரும் வகையில் தகுந்த பாதுகாப்புடன் விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவிக்கலாகிறது.
மேலும், FBM and ABC முகாமில் கலந்துகொண்ட சாரண ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு 22.02.2021 அன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.