பள்ளிக் கல்வி – மகாகவி சுப்ரமண்ய பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள் திருவிழா உற்சவம் – பள்ளிகளில் நடத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான விவரங்கள் கீழ்காணும் Google Form-ல் பூர்த்தி செய்ய தெரிவித்தல் – சார்ந்து
மகாகவி சுப்ரமண்ய பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய மொழிகள் திருவிழா உற்சவம் அனைத்து வகையான பள்ளிகளிலும் 05.12.2024 முதல் 11.12.2024 வரை நடத்தி அதன் விவரம் அனுப்புமாறு இவ்வலுவலக கடித ந.க.எண்.4921/ஆ5/2024, நாள். 04.12.2024 -ன்படி அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு இவ்வலுவலக இணையதளத்தில் 05.12.2024 அன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்காண் பொருள் சார்பாக பள்ளிகளில் நடத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான விவரங்கள், புகைப்படம் மற்றும் காணொலி கீழ்காண் கொடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM-ல் 11.12.2024 பிற்பகல் 12.00 மணிக்குள் பூர்த்தி செய்யுமாறு அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
GOOGLE FORM LINK - https://forms.gle/TjpwGCZoVHX7FFRL9
//ஒப்பம்//
முதன்மைக் கல்வி அலுவ