அனைத்து அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைபப்ள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அனைத்து அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைபப்ள்ளி தலைமையாசிரியர்கள் நாளை (07.04.2022) சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கூட்டத்திற்கு வரும்போது இணைப்பில் கண்ட படிவங்களை (படிவங்கள் 1 மற்றும் 2) பூர்த்தி செய்து கூட்ட அரங்கில் நேரடியாக பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், நாளை (07.04.2022) சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி (மெட்ரிக் பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான ஆயத்தக்கூட்டத்திற்கு சரியாக காலை 9.30க்குள் வருகைபுரியும்படியும், கால தாமதமாக வரும் தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதியில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்