அனைத்து நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ தாளாளர்கள் கவனத்திற்கு,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2019-2020ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் உள்ள இடங்களை விட கூடுதலான எண்ணிக்கையில் விண்ணப்பிக்கப்பட்ட இணைப்பில் உள்ள பள்ளிகள் மட்டும் 06.06.2019 காலை 11.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்படும் துறை அலுவலர் மற்றும் வருவாய்த்துறையிலிருந்து நியமனம் செய்யப்படும் அலுவலர் முன்னிலையிலும் விண்ணப்பிக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையிலும் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நடைபெற்று பள்ளியின் தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்.
அந்த அந்த பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணவர் விவரம் சம்மந்தப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS TO CONDUCT LOT SELECTION ON 06.06.2019
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்