அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை

அனைத்து அரசு/நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுற்றறிக்கை,

6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான 3ம் பருவ பாடத்திட்டங்கள் உரிய நாட்களுக்குள் எவ்வித தொய்வுமின்றி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒரு சில பள்ளிகளில் மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் பெறப்பட்டுவரும் நிலையில் அனைத்துப்பள்ளிகளிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் சரளமாக வாசித்தல், தவறின்றி எழுதுதல், அடிப்படை கணித அறிவு,ஆங்கில அகராதி பயன்படுத்த பயிற்சி, நாள் தோறும் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித் தாள் வாசிக்கும் பயிற்சி, பள்ளி நூலக புத்தகங்கள் பயன்படுத்த அனுமதித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை மேம்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது- பூர்த்தி செய்து தயார்நிலையில் வைக்கவும்). மேலும், மேற்கண்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, “ஒருங்கிணைந்த கல்வி”  ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் பள்ளி ஆய்வின்போது ஒவ்வொரு மாணவர்களின் அடைவு குறித்து விளக்கும் வண்ணம் சார்ந்த பாட ஆசிரியர்கள் தங்களது பணியினை செவ்வனே செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு  எழுதும் மாணவர்களுக்கு தேர்விற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகைபுரிவதை பாட ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு திருப்புதல் தேர்வு உள்ளிட்ட பயிற்சிகளை திட்டமிட்டு செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வோடு 100 வினாக்கள் கொண்ட புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள (New patern) ஒரு மதிப்பெண் வினாத்தாட்கள் அனைத்துப் பாடங்களுக்கும்  பயிற்சிக்கு வழங்கப்படவுள்ளது. அவற்றை முறையாக மாணவர்களுக்கு வழங்கி பயிற்சிகள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பாட வேளைகளுக்கும் சார்ந்த பாட ஆசிரியர்கள் அந்தந்த வகுப்பிற்கு செல்வதை தலைமையாசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும், பள்ளி வேலை நேரத்தில் தலைமையாசிரியரின் அனுமதியின்றி ஆசிரியர்கள் / ஆசிரியரல்லாத பணியாளர்கள் பள்ளியினைவிட்டு வெளியில் சென்றால் சார்ந்த ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, கல்வி ஆண்டின் இறுதி மாதங்களில் உள்ள நிலையில் அனைத்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் கவனம் செலுத்த அனைத்து பாட ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இச்சுற்றிக்கை இணைக்கப்பட்டுள்ளது, இதனை அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் சுற்றுக்கு அனுப்ப தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR

CLICK HERE TO DOWNLOAD THE FORMS (FILL AND KEEP WITH READY)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.