அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
07.02.2025 முதல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு செய்முறைத் தேர்விற்கு பயன்படுத்த வேண்டிய படிவங்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது . செய்முறைத் தேர்வு முடிந்தவுடன் அன்றே மதிப்பெண் பட்டியல்கள் (மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றொப்ப பதிவேடுகளை தவிர இதர ஆவணங்கள்) வேலுர் மாவட்டம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒப்படைக்கப்படவேண்டும்.
மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதிய பற்றோப்ப பதிவேடுகளை வேலுர் கல்புதுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்.
பெறுநர்
அனைத்து செய்முறைத் தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார்) வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
உதவி இயக்குநர் அரசுத் தேர்வுகள் உதவிஇயக்குநர் அலுவலகம் கல்புதுர் காட்பாடி அவர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.