அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கவனத்திற்கு,
10.05.2024 அன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டள்ளதை தொடர்ந்து www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு 13.05.2024 அன்று முதலே வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், பள்ளித் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Certificate) சரிபார்த்து மாணவர் பெயர், பிறந்த தேதி, தலைப்பெழுத்து, புகைப்படம், பயிற்று மொழி ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை சான்றொப்பமிட்டு மாணவர்களுக்கு அளித்திட வேண்டும்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்து வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்க ஏதுவாக, அத்திருத்தங்களை பின்னர் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அறிவிக்கப்படும் நாளன்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஓம்.முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்