06.07.2018 வெள்ளிக்கிழமையன்று அரசு/ நலத்துறை மற்றும் நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டம் அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் – High School HMs @4.00pm & Hr.Sec.HMs @ 5.00 PM

06.07.2018 வெள்ளிக்கிழமையன்று அரசு/ நலத்துறை மற்றும் நிதியுதவி உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டம் கீழ்க்கண்டவாறு அரசு(முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.

நேரம்

மாலை 4.00 மணிஅரசு/நிதியுதவி மற்றும் நலத்துறை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

மாலை 5.00 மணிஅரசு/நிதியுதவி மற்றும் நலத்துறை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்

கூட்டப்பொருள்:

  1. வினாத்தாள் பகிர்வு மையத் தலைமையாசிரியர்கள் பள்ளியிலிருந்து பெறப்பட்ட வினாத்தாள் உத்தேச தேவைப்பட்டியலை ஒருங்கிணைப்பாளரிடம் மற்றும் அதற்கான கட்டணத்திற்கான DD கீழ்காணும் முகவரியில் ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

     DD favour of : – CEO DISTRICT COMMON EXAM

     Venue: –  Sri Venkateswara Hr.Sec.School, Vellore – தினந்தோறும் மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை

1) 2018-19ஆம் கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் கழக ஆண்டு சந்தா

உயர்நிலைப்பள்ளிகள்ரூ.460/-

மேல்நிலைப்பள்ளிகள்ரூ.660/-

தலைமையாசிரியர் கூட்டத்தில்5’ பிரிவு எழுத்தரிடம் ரொக்கமாக செலுத்தி  உரிய இரசீதினை  பெற்றுக்கொள்ள வேண்டும்.

2) 2018-19ம் கல்வி ஆண்டிற்கான தங்கள் பள்ளியின் அனைத்து வகுப்புகளுக்கான கால அட்டவணை  மற்றும் பாட ஆசிரியர்களுக்கான கால அட்டவணைஉயர்நிலைப்பள்ளிகள் நேர்முக உதவியாளர் (இடைநிலை) அவர்களிடமும், மேல்நிலைப்பள்ளிகள், நேர்முக உதவியாளர் (மேல்நிலை) அவர்களிடமும் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

3) பள்ளி வேலை நேரம் காலை முதல் மாலை வரை.

4) காலிப்பணியிட விவரம் படிவம் -1 மற்றும் படிவம்-2 பூர்த்தி செய்து கூட்டத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

5) மாற்றுத்திறனாளிகள் விவரம் மற்றும் ஆங்கில வழியில பயிலும் மாணவர்கள் விவரம்

    மேற்படி விவரங்களை தலைமையாசிரியர் கையொப்பத்துடன் சமர்ப்பிக்கும்படி அனைத்துவகை தலைமயாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.